Ad

புதன், 17 மார்ச், 2021

’நோ’ சொல்லப்பட்ட தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்... பின்னணி என்ன?

சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்கும்போதெல்லாம் தவறாமல் கலந்துகொள்ளும் ரவிச்சந்திரன், தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டதுமில்லை; தொண்டர்களுடன் நெருங்கிப் பழகியதுமில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில் பூங்கா ஒன்றைக் கட்டிய ரவிச்சந்திரன், அதில் லம்ப்பாக அடித்துவிட்டதாக ஸ்டாலின் வரை புகார் சென்றது. மேலும், கட்சிக்குள் ரவிச்சந்திரனுக்கும் மாவட்டச் செயலாளர் சேகர்பாபுவுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால்தான், சீட் மறுக்கப்பட்டிருப்பதாக உடன்பிறப்புகள் சொல்கிறார்கள்.

ரவிச்சந்திரன்

‘சாகும்போதும் எம்.எல்.ஏ-வாகத்தான் சாவேன்’ என்பதுதான் ரங்கநாதன் அடிக்கடி கட்சியினரிடம் கூறும் டயலாக். உட்கட்சித் தேர்தலில் ஒருமுறை மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு சேகர்பாபுவுடன் மோதியதிலிருந்து இருவருக்கும் ஆகாது. இவர்மீது ஏகப்பட்ட நில அபகரிப்புப் புகார்கள் இருப்பதால், ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் அதில் சிக்கி அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடுவாரோ என்ற அச்சமும் தலைமைக்கு இருந்ததாம். வயோதிகமும் சீட் மறுக்கப்பட்டதற்குக் கூடுதல் காரணம் என்கிறார்கள்.

ரங்கநாதன்

எம்.எல்.ஏ என்பவர் தொகுதி மக்களுடன் நெருங்கிப் பழக வேண்டியர். ஆனால், அப்படி சகஜமாக கட்சியினரிடமும் தொகுதி மக்களிடமும் பழகாமல், சினிமா ஹீரோ பாணியிலேயே செயல்பட்டு வந்துள்ளார் வாகை சந்திரசேகர். குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த, படித்தவர்கள் அதிகமுள்ள, ஐ.டி நிறுவனங்கள் நிறைந்திருக்கிற தொகுதிக்குள் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டியதும், வயோதிகமும்தான் சீட் மறுக்கப்பட காரணம் என்கிறார்கள்.

வாகை சந்திரசேகர்

தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, சில பணிகளை ஆடலரசன் செய்திருந்தாலும்கூட, குடிநீர் தட்டுப்பாடு, கிராமப்புற சாலைகள் மேம்பாடு, கோரை ஆறு தூர்வாருதல், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளைத் தீர்க்காதது, தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்தான் தி.மு.க கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்டுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

ஆடலரசன்

முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோதும், தொகுதிக்குப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பதைத் தவிர இவருக்கு சீட் மறுக்கப்பட வேறு முக்கிய காரணம் ஏதுவுமில்லை. கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட வசம் இத்தொகுதி போய்விட்டது. மதிவாணனின் சொந்த மாவட்டமான திருவாரூரிலுள்ள திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியும் இந்திய கம்யூனிஸ்ட் வசம் போய்விட்டது. எனவே, மதிவாணனுக்கு கல்தா தரவேண்டியது கட்டாயமாகிவிட்டது.

மதிவாணன்

அமைச்சர் விஜயபாஸ்கருடனான மறைமுக நட்பு, அ.தி.மு.க-வுக்கு எதிராக செயல்படாதது, உடல்நிலையைக் காரணம் காட்டி தி.மு.க நடத்தும் போராட்டங்களிலும் பங்கெடுக்காதது, தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசாதது, தொகுதிக்குள் இருந்தும் மக்களைச் சந்திக்காதது, கொரோனா துயரின்போது மற்ற எம்.எல்.ஏ-க்கள் காட்டிய ஆர்வத்தை இவர் காட்டாதது, போதாக்குறைக்கு கட்சித் தொண்டர்களையும் மதிக்காதது ஆகியவைதான் சீட் மறுக்கப்பட காரணம்.

பெரியண்ணன் அரசு

இவர்மீது, மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அதிருப்தியே நிலவியது. இருந்தாலும், தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இராமருக்கு சீட் பெற்றுத்தர கே.என்.நேரு முயன்றாராம். ஆனால், மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, ‘கலைஞர் முதன்முதலில் வென்ற தொகுதி இது. தி.மு.க-தான் இங்கே அதிகபட்சமாக ஆறு முறை ஜெயித்திருக்கிறது. இம்முறையும், தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதியாக குளித்தலை இருக்கிறது. ஆனால், இராமருக்கு சீட் கொடுத்தால், குளித்தலையை இழக்க நேரிடும்’ என்று தலைமையிடம் சொல்லி, முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கத்துக்கு சீட் பெற்று கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

ராமர்

கடந்த 20 வருடங்களாகத் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ-வாக இருந்தவர். வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டபோதிலும், கட்சித்தலைமை மைதீன்கானை அழைத்துப் பேசிய பின்னரே புதியவரான அப்துல் வஹாப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டி.பி.எம்.மைதீன்கான்


ராசியில்லாத மனுசன்’ என கூடலூரின் கடைசித் தொண்டர் வரை எம்.எல்.ஏ திராவிடமணியைப் பற்றி புலம்புவதைக் கேட்கலாம். தொடர்ந்து 10 ஆண்டுகளாக கூடலூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும், இவரால் பெரிதாக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. ‘தீர்க்கப்படாத செக்‌ஷன் 17 நிலப்பபிரச்னை, மனித-வனவிலங்கு எதிர்கொள்ளல்களை தடுக்க உரிய நடவடிக்கை இல்லை. தனியார் பெருந்தோட்டங்களின் ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை மீட்கவில்லை’ உள்ளிட்ட பல அதிருப்திகள் இவர் மீது உள்ளன. இவைதான் சீட் மறுக்கப்பட காரணம்.

திராவிட மணி
சரவணன்

இவருடைய வளர்ச்சி மதுரை மாநகரப் பொறுப்பாளர் கோ.தளபதிக்கும் புறநகர் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்திக்கும் பிடிக்கவில்லை. தி.மு.க ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அமைச்சர் பதவிக்கான போட்டியில் தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பார் என நினைத்து ஒதுக்க ஆரம்பித்தார்கள். ‘கட்சி நிகழ்ச்சிகளை இஷ்டத்துக்கு நடத்துகிறார். தன்னை முன்னிலைப்படுத்துகிறார்’ என்று நெகடிவ்வான விஷயங்களை ஸ்டாலின் காதுக்குக் கொண்டுபோனார்கள். ‘இத்தேர்தலில் திருப்பரங்குன்றம் வேண்டாம். மதுரை வடக்கு வேண்டும்’ என்று கேட்டிருந்தார் சரவணன். அத்துடன், ஐபேக் ரிப்போர்ட்டும், உதயநிதி உள்ளிட்டோரின் தொடர்பும் தனக்கு உதவியாக இருக்கும் என்று நம்பினார். அது நடக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த சரவணன், பா.ஜ.க-வில் இணைந்து மதுரை வடக்குத் தொகுதியைப் பெற்றுவிட்டார்.

சத்யா


இவருக்கு சீட் மறுக்கப்பட பெரிதாக எந்தக் காரணமும் இல்லை. தளி தொகுதி எம்.எல்.ஏ-வான ஒய்.பிரகாஷ், இம்முறை ஓசூருக்கு இடம்பெயர்ந்துவிட்டார். தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு சென்றுவிட்டதால், இவர் வெளியேற்றப்பட்டுவிட்டார்.



source https://www.vikatan.com/news/politics/background-details-behind-dmk-mlas-not-given-seat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக