Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

கோவை: `பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்!' - கௌதமி நம்பிக்கை

சட்டசபை தேர்தல் அறிவிப்பு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் முனைப்பு காட்டி வருகின்றன. அ.தி.மு.க - பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பா.ஜ.க பேரணி

Also Read: ``அ.தி.மு.க-வினர் பா.ஜ.க அரசையே கலாய்க்கிறார்கள்!'' - சொல்கிறார் தங்கம் தென்னரசு

இந்நிலையில், பா.ஜ.க-வினர் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து சிவானந்த மில்ஸ் வரை 400-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பேரணியாக சென்றனர். பா.ஜ.க கொடி மற்றும் தாமரை சின்னம் ஆகிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியை பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான கெளதமி தொடங்கி வைத்தார். இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை.

பா.ஜ .க கௌதமி

பேரணியில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “வரக்கூடிய நாள்கள் ஒவ்வொன்றும் நமக்கு முக்கியம். தாமரை மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக உழைத்து, தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதை லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும்“ என்றார்.

இதையடுத்து பேசிய கௌதமி, “ஒளியமான எதிர்காலத்துக்காக இந்தத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். எந்த வேட்பாளர், எந்தத் தொகுதியில் நின்றாலும் நம் கூட்டணியை வெற்றி பெற உழைக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெளதமி,

கௌதமி, வானதி சீனிவாசன்

“தேர்தல் பரப்புரையை தொடங்கியிருப்பது பொன்னான எதிர்காலத்துக்கு முதற்படி. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிய நேரம் எடுத்தாலும், விரைவில் முடிவு எடுக்கப்படும்“ என்று கூறினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/bright-chance-for-bjp-in-election-says-gowthami

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக