Ad

சனி, 13 மார்ச், 2021

`பணம் இருந்தால் போதுமா?’ - வேட்பாளர் தேர்வால் கொதிக்கும் திருச்சி திமுக

`பணம் இருந்தால் போது தி.மு.க-வில் சீட் வாங்கிவிடலாம் என்பதற்குத் திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் ஆகிய இரண்டு தொகுதிகளே சாட்சி. இத்தனை வருடங்கள் இவர்கள் எங்கே இருந்தார்கள். கட்சிக்காக உழைத்த நாங்கள் கடைசிவரையிலும் போஸ்டர் தான் ஒட்டவேண்டுமா? இருதொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களை மாற்றுங்கள்’ என்று புதுக்கலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது திருச்சி திமுக-வில்.

ஸ்டாலின்

இவர்களை எதிர்த்து ஒரு தரப்பினர் கே.என்.நேருவைச் சந்தித்திருக்கிறார்கள். அவர் அளித்த தகவல் தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் தி.மு.க-வினர். ஏன்? எதற்காக வேட்பாளரை மாற்றவேண்டும்? என்று தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.

கே.என் நேரு

தமிழகத்தில் தேர்தல் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், அ.தி.மு.க-வினர் வேட்பாளர்களை அறிவித்த நாளிலிருந்து இன்று வரையிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. வேட்பாளர்களை மாற்றக் கோரியும், கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, துறையூர், அறந்தாங்கி உட்படத் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க-வினர் நேற்றிலிருந்து சாலை மறியல், தீக்குளிப்பு மிரட்டல் போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்ததும் திருச்சி தி.மு.க-வினர் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தி.மு.க தொண்டர்கள்

கட்சி நிர்வாகிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தங்களது குறைகளைக் கட்சி மூத்த நிர்வாகிகளிடம் சொல்லிக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருச்சி கிழக்கு, மணச்சநல்லூர் தொகுதிகள் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

திருச்சி தி.மு.க வேட்பாளர்கள்

எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.”தி.மு.க-வில் பணம் இருந்தால் தான் சீட் என்கிற நிலைமை இன்றளவும் இருக்கிறது. இனிகோ இருதயராஜ், கதிரவன், இவர்கள் இருவரும் யார்? கட்சிக்காக எத்தனை முறை சிறைக்குச் சென்றார்கள். இவர்களுக்கு எப்படி சீட் கொடுத்தார் தளபதி. மணச்சநல்லூர் வேட்பாளர் கதிரவன், இவர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன். இவர்களுக்குச் சொந்தமாகப் பல கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் இருக்கிறது.

திருச்சி சிறுகனூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்குக் கணிசமாக பணம் கொடுத்ததால் இந்த முறை அவருக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். அவரைத்தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜிக்கு சீட் வழங்கியிருக்கிறார்கள்.

திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டம்

இவருக்கு எந்த அடிப்படையில் சீட் கொடுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இனிகோ சென்னையில் மிகப்பெரிய தொழில் அதிபர். இத்தொகுதியைக் குறிவைத்து இரண்டு மாதங்களாக வேலைப்பார்த்து வருகிறார். ஆனால், இன்றளவும் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. அவரது பெயரை மக்களிடம் பதிய வைப்பதற்காக போஸ்டர்கள், தினசரிப் பத்திரிகைகள், ஐடி டீம் எனப் பல கோடிகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்.

நேற்று காலை அவசர அவசரமாக தி.மு.க-வில் உறுப்பினராகக் கட்சியில் இணைகிறார். இணைந்ததுமே கட்சியில் சீட் வழங்கப்படுகிறது அப்படி என்றால் கட்சியில் என்ன நடக்கிறது என்று நீங்களே நினைத்துப்பருங்கள். இவர் தொழில் அதிபர். பலகோடிகளை வைத்திருக்கிறார் என்பதால் திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குப் பணம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவரால் தரமுடியவில்லையாம்.

இனிகோ இருதயராஜ் ஸ்டாலின்

இதனால் தலைமை இவர் மீது உஷ்ணத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்ட இனிகோ, பணத்தை மூன்று நாட்களுக்கு முன்பு கைமாற்றியிருக்கிறார். தலைமையிடம் நெருக்கத்திலிருந்தால் மட்டும் போதுமா நிர்வாகிகளை மதிக்கவேண்டாமா? பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று நினைப்பவருக்கு வேறு விதத்தில் செக் வைக்க இருக்கிறோம்” என்றார் அதிரடியாக.

மண்ணச்சநல்லூர் தி.மு.க வேட்பாளர் கதிரவன்

தொடர்ந்து, ``இவரது செயல்பாடுகள் பிடிக்காத நாங்கள் நேற்று காலை கே.என்.நேருவைச் சந்தித்தோம். அதற்கு அவர் என்னிடம் பேசி எந்த புண்ணியமும் இல்லை. எதுவாக இருந்தாலும் தளபதி, ஐ.பேக் டீம்மிடம் பேசுங்கள் என்றிருக்கிறார். இது தான் தி.மு.க-வின் நிலை. கட்சிக்காக உழைத்த நாங்கள் கடைசிவரையிலும் போஸ்டர் தான் ஒட்டவேண்டு என்று நினைக்கிறார்கள் போல" என்று உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார்கள் திருச்சி தி.மு.க-வினர்.

நேரு

இதுகுறித்து தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். ”இது முற்றிலும் தவறான தகவல். இனிகோ இருதயராஜ் கலைஞர் மட்டுமில்லாமல் தளபதியுடன் இன்றளவும் நேரடி தொடர்பிலிருந்து வருகிறார். அதேபோல் தான் சீனிவாசனின் குடும்பமும். இவர்கள் இருவரும் தளபதியின் மீது பற்றுள்ளவர்கள். அந்த விசுவாசத்திற்காக சீட் வழங்கப்பட்டுள்ளது. சீட் கிடைக்காதவர்கள் விரக்தியில் எதுவேண்டுமானாலும் பேசுவார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க முடியாது" என்றார் ஆவேசமாக.



source https://www.vikatan.com/news/politics/trichy-dmk-cadres-upset-over-the-dmk-candidate-anouncement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக