தேர்தல் களத்தில் சமீப நாள்களாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா, இல்லையா என்பதுதான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை உதயநிதி அளித்தது முதல் அவரைச் சுற்றிப் பல்வேறு விமர்சனங்கள், கேள்விகள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. `வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சி’, `குடும்ப அரசியல் நடத்தும் கட்சி’ என்று தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் வெளியானது.
தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்ததில், உதயநிதி போட்டியில்லை என்று 100% அடித்துக் கூறுகின்றனர். அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ஒருவேளை தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் தகவல்களைத் திரட்டத் தொடங்கினோம்...
Also Read: `உதயநிதி போட்டி இல்லையா..!’ - தகவல் பரவுவதன் பின்னணி என்ன?
உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், போட்டியிட்டால் அவரைத் தோற்கடிக்கத் தேவையான அனைத்து வேலைகளிலும் எதிர்க்கட்சி முகாம் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது தி.மு.க-வின் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகை குஷ்புவை போட்டியிடவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
குஷ்பு போட்டியிடும் பட்சத்தில் அங்கிருக்கும் பிராமணர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளைக் கணிசமாகப் பிரித்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். அதேபோல அ.ம.மு.க தன் கூட்டணியில் இருக்கும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சிக்கு (எஸ்டிபிஐ) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை ஒதுக்கத் திட்டமிட்டிருக்கிறதாம். அப்படி சேப்பாக்கம் தொகுதி அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் குறைந்தது 20,000 சிறுபான்மையினர் வாக்குகளையாவது உதயநிதிக்குக் கிடைக்காமல் தடுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
மற்றொருபுறம் ஒவைசியின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரையும் உதயநிதிக்கு எதிராகக் களமிறக்க முயல்கிறார்கள். இதன் மூலம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கும் இஸ்லாமியர் வாக்குகளைப் பிரித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். இப்படி மும்முனைத் தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருக்க வேண்டும். தோற்றால் அரசியலில் உதயநிதிக்கு அது மிகப்பெரிய அடியாக இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் திட்டம் என்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிடவில்லையென்றால், ஏன் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றார் என்ற கேள்வி எழுகிறது. ``நேர்காணலின்போது தலைவரை நேரில் சந்தித்துவிடலாம் என்பதற்காகத்தான் கட்சித் தொண்டர்கள் பலர் விருப்ப மனு அளித்தனர். என்னதான் தந்தை - மகன் உறவு இருந்தாலும், தொண்டனாக அவர் முன் உதயநிதி ஸ்டாலின் நேர்காணலில் பங்குபெற வேண்டும். அந்த உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று உதயநிதிக்கு விருப்பம் இருப்பதால்தான் அவர் நேர்காணலில் பங்கேற்றார்” என்கிறார்கள்.
மேலும், ``ஒருவேளை உதயநிதி நிற்பதாக முடிவுசெய்தால் சைதாப்பேட்டை அல்லது ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் நிற்பார். எதிர்க்கட்சி என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிற என்பது எங்களுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இந்த இரு தொகுதிகளில் உதயநிதி போட்டியிட்டால் ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதுதான் தலைமையின் தற்போதைய திட்டமாக இருக்கிறது” என்றவர்கள் ``தற்போது வரை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதுதான் உதயநிதியின் நிலையாக இருக்கிறது. ஒருவேளை கிச்சன் கேபினெட்டின் அழுத்தம் அதிகரித்தால் கடைசி நேர முடிவாக உதயநிதியைப் போட்டியிடவைக்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. உங்களைப்போலவே நாங்களும் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்” என்றனர்.
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ
தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle
source https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-plans-to-split-vote-bank-against-udhayanidhi-stailn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக