Tamil News Update
Ad
புதன், 10 மார்ச், 2021
சென்னையில் பரபர தொகுதி பங்கீடு... வெளி மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள்! - தேர்தல் க்ளிக்ஸ்
மதுரையில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் மணற்சிற்பத்தை புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஊடக கண்காணிப்பு அறை செயல்படத் தொடங்கியிருக்கிறது.
சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி மண்டலத் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அ.தி.மு.க குறித்து அவதூறாகப் பேசியதாக தே.மு.தி.க கழக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் உருவ பொம்மையை எரித்த அ.தி.மு.க-வினர்.
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை குறித்த ஒட்டுவில்லைகளை வாகனத்தில் ஒட்டும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், கூட்டணியில் இருக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.
தேர்தல் நிலைப்பாடு குறித்து மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
தொகுதிப் பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் மனித நேய மக்கள் கட்சியினர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர்.
தொகுதிப் பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்
ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தும் ராமநாதபுரம் மகளிர் அமைப்பினர்.
source
https://www.vikatan.com/government-and-politics/politics/political-moves-and-election-awareness-campaign-election-photo-collection-10-03-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக