Ad

புதன், 10 மார்ச், 2021

கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கலா?! நள்ளிரவு சோதனையால் பரபரப்பு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணங்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பொறியாளர் லட்சுமணனின் இல்லத்தில் வாக்காளர்களுக்கு வழங்க ரூ.5 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தி.மு.க-வினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கோவை மாநகராட்சி பொறியாளர் இல்லம்

இதையடுத்து, ஏராளமான தி.மு.க-வினர் அங்குக் குவிந்தனர். அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், போலீஸார் மற்றும் பறக்கும் படையினர் அந்த இடத்துக்கு வந்தனர்.

Also Read: தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினால் `கூண்டோடு ராஜினாமா செய்வோம்’ - கொந்தளித்த கோவை அ.தி.மு.க

“உடனடியாக சோதனை செய்யுங்கள்” என்று தி.மு.க-வினர் வலியுறுத்தினர். ஆனால், “ஆர்.ஓ வந்தால்தான் சோதனை நடத்த முடியும்” என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “அப்பாவி யாராவது பணம் எடுத்துட்டு போனா மட்டும் பிடிச்சுட்டு போறீங்க.

கோவை மாநகராட்சி பொறியாளர் இல்லம்

எங்க இருந்து உத்தரவு வரணும் உங்களுக்கு?. அமைச்சர் தொகுதில நிக்கறார்னு பயப்படறீங்களா” என்று தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர். மேலும், அ.தி.மு.க-வினருக்கு துணை போவதாக அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, நள்ளிரவு 2 மணிக்கு ஆர்.ஓ சம்பவ இடத்துக்கு வந்தார். அதைத்தொடர்ந்து, பொறியாளர் லட்சுமனன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தி.மு.க-வினர், “அதிகாரிகள் காலதாமதாக வந்ததாலே, பணத்தை கைப்பற்ற முடியவில்லை.

சோதனை

தேர்தல் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. அப்படி செயல்படும் அதிகாரிகளை உடனடியாக பணியிடம் மாற்ற வேண்டும்” என்றனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “சோதனையில் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/raid-in-coimbatore-corporation-engineer-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக