Ad

வியாழன், 18 மார்ச், 2021

அதிகம் மாசடைந்த தலைநகரங்கள் பட்டியல்... ஹாட்ரிக் அடித்திருக்கும் டெல்லி!

மூன்றாவது வருடமாக அதிக காற்று மாசுள்ள தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமான IQAir 2020-ல் அதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காற்றில் 2.5 மைக்ரான் அளவுக்கும் குறைவான விட்டம் (Diameter) கொண்ட துகள்களின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தே காற்று மாசுபாடு அளக்கப்படுகிறது. சராசரியாக நம் தலைமுடியின் விட்டம் 50-70 மைக்ரான் வரை விட்டம் கொண்டிருக்கும். 2.5 மைக்ரான் என்பது நம் தலைமுடியின் விட்டத்தை விட 20 மடங்கு குறைவு. இந்த அளவு குறைவான விட்டம் கொண்ட துகள்கள் நம் நுரையீரலில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனை PM2.5 என அழைக்கின்றனர்.

106 நாடுகளில் காற்று மாசுபாட்டின் அளவு அளக்கப்பட்டு அதில் அதிக மாசடைந்த நகரங்கள் IQAir-ன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் அதிக மாசடைந்த நகரங்களில் முதல் 50 இடங்களில் 35 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 2020-ல் டெல்லியில் ஒரு சதுர மீட்டர் அளவிலான காற்றில் சராசரியாக 84.1 அளவில் PM2.5 இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2020-ல் சீனாவின் பீஜிங் நகரத்தின் சராசரியான 37.5-ஐ விட அதிகம்.

Also Read: செய்திக்கு பணம் கொடுக்கும் பேஸ்புக்... ராபர்ட் முர்டோக் நிறுவனத்தோடு கூட்டணி!

சென்ற ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காற்று மாசுபாடு அளவு 11 சதவிகிதம் குறைந்திருந்தது. ஆனால் அதையும் தாண்டி அதிகம் மாசடைந்த நாடுகள் பட்டியலில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. சென்ற ஆண்டு ஊரடங்கின் காரணமாக டெல்லியில் குறைந்திருந்த காற்று மாசு, கடந்த நவம்பர் மாதம் அதன் பக்கத்து மாநிலமான பஞ்சாபில் வயல்வெளிகள் எரிந்ததால் மீண்டும் அதிகரித்துள்ளது. தெற்காசிய நாடுகளில்தான் காற்று மாசு அதிகம் இருப்பதாகவும் IQAir-ன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/environment/delhi-stands-at-1st-place-in-most-polluted-capital-iqair-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக