Ad

திங்கள், 1 மார்ச், 2021

கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன்;உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் - துரைமுருகன்

தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று கொளத்தூரில் சிறப்பு பொதுக் கூட்டம் நடந்தது.

துரைமுருகன்

`லட்சியத் தலைவரின் எழுச்சி நாள்` என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். முன்னதாக, ஸ்டாலின் பிறந்தாளை முன்னிட்டு கட்சியின் பிரசார பாடலை, நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

மாலை கொளத்தூர் கூட்டத்தில் துரை முருகன் பேசியதாவது, “ ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் முதலமைச்சராக அமரப்போகிறார். இன்று தளபதியாக பிறந்தநாள் கொண்டாடும் அவர், அடுத்த ஆண்டு முதலமைச்சராக பிறந்தநாள் கொண்டாடுவார். தி.மு.க-வை பற்றி அமித் ஷா பேசியதிலிருந்து டெல்லி, தி.மு.க-வைக் கண்டு அஞ்சுகிறது என்று தெரிகிறது. ” என்றார்.

Also Read: தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: காங்கிரஸ் கேட்பது எத்தனை... தி.மு.க தர நினைப்பது எத்தனை?

தொடர்ந்து பேசிய அவர், “ கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பான். நாளை உதயநிதியின் அமைச்சரவையிலும் இருப்பான். எங்கோ இருந்த என்னை, 2 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளராக அமர வைத்திருக்கிறார்களே. இது ஒன்று போதாதா?” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/i-will-be-present-udhayanidhi-cabinet-says-duraimurugan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக