Ad

திங்கள், 8 மார்ச், 2021

சிவகங்கை: `முதல்வர் குறித்து அவதூறு பேச்சு!’ - ஏப்ரல் 9ம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் என்.வைரவன்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் பலரது மனுக்களை புகார் பெட்டி மூலம் வாங்கிக் கொண்டார்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

அப்போது மேடையில் மத்திய, மாநில அரசுகளையும் பிரதமர், தமிழக முதல்வர், அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை தொடர்ந்து சிவகங்கை அ.தி.மு.க சார்பில் முதல்வர் குறித்து ஸ்டாலின் அவதூராக பேசியதாக சிவகங்கை எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக பேசியதால் அரசு வழக்கறிஞர் ராமநாதன் கடந்த 03.03.21 அன்று வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதிபதி சுமதி சாய்ப்பிரியா ஏப்ரல்- 9 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக உத்தவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வழக்கறிஞர்கள் இராமநாதன் மற்றும் சுரேஷ் கூறுகையில், ``முதல்வர் பற்றியும் அரசு பற்றியும் மு.க.ஸ்டாலின் தரக்குறைவாக பேசியுள்ளார். கரப்ஷன், கமிஷன் ஆட்சி என்றெல்லாம் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் வாயில் முதல்வர் விஷத்தை ஊற்றியதாக தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

இப்படி பல்வேறு அவதூறுகளை பேசியுள்ளார். எனவே ஆளுநர் ஒப்புதலுடன் வழக்கறிஞர்கள் சார்பாக தனி வழக்காக பதிவு செய்தோம். இதன் விசாரணை வரும் ஏப்ரல்-9 தேதி வருகிறது. அன்று ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளனர். ஸ்டாலின் தொடர்ந்து இவ்வாறு பேசிவருகிறார். உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கிய பின்னரும் இவ்வாறு பேசிவருகிறார்” என குற்றம் சாட்டினர்



source https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-district-court-orders-stalin-to-present-for-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக