Ad

திங்கள், 15 மார்ச், 2021

மதுரை : பாஜக-வில் சேர்ந்து 4 மணி நேரத்தில் சீட் பெற்ற திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்

``இருக்கிற திமுக எம்.எல்.ஏ-க்களில் சொந்தப் பணத்தைச் செலவழித்து தொகுதி மக்களுக்கு சேவை செய்தேன். மணல் கடத்தலுக்கு எதிராக வழக்கு போட்டேன்... இப்படி நல்ல விஷயங்களை செய்ததால்தான் எனக்கு சீட் கொடுக்கவில்லையோ..." என்று திமுக தலைமையை வெளிப்படையாகவே விமர்சித்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை பாஜக-வில் இணைந்தார். ஆனால், அவரே மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று திமுக-வினர் மட்டுமல்ல, பாஜக-வினரும் எதிர்பார்க்கவில்லை.

பாஜக-வில் இணைந்தபோது

அதிமுக கோட்டையான திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கடந்த 2019-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்.எல்.ஏ-வாகி அனைவரையும் ஆச்சார்யப்படுத்தியவர் டாக்டர் சரவணன்.

மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரான இவர், ஆரம்பத்தில் மு.க.அழகிரி ஆதரவாளராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் பிறகு மதிமுக-வில் இணைந்தார்.

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக சில காலம் மதிமுக-வில் பயணித்துவிட்டு, 2015-ல் பாஜகவில் சேர்ந்தார். அங்கும் சூழல் சரியில்லாததால் 2016-ல் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். மருத்துவ அணி மாநில துணச் செயலாளாரக பொறுப்பு வழங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டதால், 2017-ல் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.

டாக்டர் சரவணன்

அந்தத் தேர்தலின்போதுதான் அதிமுக வேட்பாளரின் சான்றிதழில் ஜெயலலிதா வைத்த கைரேகை சர்ச்சையானது. அதை நீதிமன்றம் வரை கொண்டு சென்று ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏகே.போஸ் மரணமடைய 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் வாயப்பளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் டாக்டர் சரவணன். இதனால் திமுக-வில் மிகவும் செல்வாக்கான நபராக ஆனார்.

திருப்பரங்குன்றம் தொகுதியை ஆளும் அரசு புறக்கணித்ததால் இவர் சொந்தப் பணத்தை செலவு செய்து நலத்திட்டங்களை செய்தார்.

இந்தநிலையில், இவருக்கும் மதுரை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்திக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதால், வருகின்ற தேர்தலில் சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாதென்று கட்சி சீனியர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவரைப் பற்றி கட்சித் தலைமையிடம் தவறான தகவல்களை போட்டுக் கொடுத்தார்கள் என்கின்றனர்.

பாஜக-வில் இணைந்தபோது

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம்-க்கு ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வந்தவுடன் அதிர்ச்சியானார்.

திருப்பரங்குன்றம் இல்லாவிட்டால் சிட்டிங் எம்.எல்.ஏ-வான தனக்கு மதுரை மாவட்டத்தில் வேறு தொகுதி ஒதுக்குவார்கள் என்று நம்பியிருந்தார் சரவணன்.

ஆனால், திமுக வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சென்னை கிளம்பி ஸ்டாலினைச் சந்திக்க முயற்சித்தார். ஸ்டாலின் பார்க்க மறுத்துவிட்டார்.

டாக்டர் சரவணன்

அதனால் ஆத்திரமடைந்த சரவணனை ஆதரவாளர்கள் அதிமுக-வில் சேர வற்புறுத்தினார்கள். அங்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இணைவது சரிப்பாடது என்று முடிவெடுத்தவர் பாஜக-வினரோடு பேச ஆரம்பித்தார். இவருக்குள்ள செல்வாக்கு, பண பலம் போன்றவற்றை அறிந்திருந்த பாஜக தலைமை இணைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டது

ஆனால், சரவணனோ மதுரையில் வடக்குத் தொகுதியை கொடுத்தால்தான் இணைவேன் என்று சொல்ல, மதுரை வடக்கு தொகுதிக்கு நல்ல வேட்பாளரை தேடிக்கொண்டிருந்த பாஜக தலைமை, இதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டது. அதோடுதான் முருகன் முன்னிலையில் இன்று காலை பாஜக-வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து அவரை வேட்பாளராகவும் பாஜக தலைமை முறையாக அறிவித்தும்விட்டது.

பாஜக-வில் இணைந்தபோது

கட்சியில் சேர்ந்த நான்கு மணி நேரத்தில் சீட் பெற்று சாதனை படைத்துள்ளார் சரவணன்.

திமுக-வில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க விடாமல் தடுத்தவர் என்று சரவணன் தரப்பினரால் குற்றம் சாட்டப்படும் திமுக மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதிக்கு எதிராக வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/dmk-mla-saravanan-joined-bjp-gets-seat-in-4hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக