Ad

புதன், 24 மார்ச், 2021

2021 வாசகர் மெகா தேர்தல் போட்டி! மொத்தப் பரிசு ரூ. 3,00,000

உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம். ஐந்து முனைப் போட்டியில் அரசியல் களம் அனலாகக் கொதிக்கிறது. பா.ம.க., பா.ஜ.க மற்றும் த.மா.கா கூட்டணியுடன் அ.தி.மு.க ஒரு பக்கம் வலுக்காட்டுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியுடன் தி.மு.க பலம் காட்டுகிறது. இதுவரை அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., சட்டென்று மாறி டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க-வுடன் கைகோத்திருக்கிறது. கமல்ஹாசன் தனிக் கூட்டணி அமைத்திருக்கிறார். எப்போதும் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது.

இந்த ஐந்து முனைப் போட்டியில் வாக்குகள் சிதறுமா, யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம், ஆதரவு அலை யாருக்கு, ஆட்சியைப் பிடிக்கப்போகும் வெற்றிக் கூட்டணி / கட்சி எது, முதலமைச்சராக அமரப்போவது யார்... எனக் கணித்துச்சொல்ல, அரசியல் கணிப்புக் கில்லாடிகளான ஆனந்த விகடன் வாசகர்களுக்கு இதோ ஒரு சவால் வாய்ப்பு.

அடுத்தடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூப்பனில் உள்ள கேள்விகளுக்கு, உங்கள் பதில்களைத் தெளிவான கையெழுத்தில் எழுதுங்கள். படிவத்தை முழுவதும் பூர்த்திசெய்த பின்னர், உங்கள் முகவரியைத் தெளிவாக எழுதி கூப்பனைக் கத்தரித்து, ‘வாசகர் மெகா தேர்தல் போட்டி-2021’, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

பூர்த்திசெய்யப்பட்ட கூப்பன்களை மேற்கண்ட முகவரியில் நேரடியாகவும் கொண்டுவந்து சேர்க்கலாம்.

ஆன்லைனில் உங்கள் கணிப்புகளை பதிவு செய்ய : https://bit.ly/AVTN2021

ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் கணிப்புகளை பதிவு செய்ய கீழே இருக்கும் qr Code ஐ ஸ்கேன் செய்யவும்

6. தேர்தலில் போட்டியிடும் கீழ்க்காணும் பிரபலங்களில் யார் வெற்றிபெறுவார்கள் அல்லது தோல்வி அடைவார்கள் என்பதை சரியான கட்டத்தில் டிக் செய்யவும். வெற்றியோ, தோல்வியோ... அது எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் இருக்கும் என்பதையும் கொடுக்கப்பட்டுள்ள நான்கு இடங்களில் ஒன்றை டிக் செய்யவும். (60 மதிப்பெண்)

போட்டிக்கான விதிமுறைகள்

  • இந்தக் கூப்பனை ஜெராக்ஸ் எடுத்தும் விடைகளைப் பூர்த்திசெய்து அனுப்பலாம். வேறு தாளில் எழுதி அனுப்பக் கூடாது.

  • ஒருவரே வெவ்வேறு கணிப்புகள்கொண்ட எத்தனை கூப்பன்களை வேண்டுமானாலும் பூர்த்திசெய்து அனுப்பலாம்.

  • கூப்பன்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாகப் பூர்த்திசெய்யப்பட்டிருப்பது அவசியம்.

  • ஒருவருக்கு மேல் சமமான மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களுக்கான பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.

  • ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.



source https://www.vikatan.com/news/election/2021-election-reader-mega-prize-contest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக