Ad

திங்கள், 15 மார்ச், 2021

"ஐபிஎல் ஏலமே மிகப்பெரிய மன அழுத்தம்!'' - 15.5 கோடிக்கு வாங்கப்பட்ட பேட் கமின்ஸ்!

இன்னும் சில வாரங்களில் 2021 ஐபிஎல் போட்டிகள் தொடங்கயிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு மிக அதிகபட்ச ஏலத்தொகையாக 15.5 கோடிக்கு எடுக்கப்பட்ட பேட் கமின்ஸ், ஐபிஎல் ஏலம் ஏற்படுத்தும் நெருக்கடி குறித்துப் பேசியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்துவீச்சாளரான பேட் கமின்ஸ், கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 15.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு வரை ஐபிஎல் ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரர் அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட சாதனை இவரிடம்தான் இருந்தது. பதினைந்தரை கோடிக்கு எடுக்கப்பட்டதாலே இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்தது. ஆனால், 14 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளே எடுத்தார் கமின்ஸ்.

இது பெரும் விவாதத்துக்குள்ளனாது. ''மேட்சுக்கு ஒரு விக்கெட் கூட எடுக்கமுடியாதவருக்கா ஒரு சீசனுக்கு 15.5 கோடிகள் சம்பளம்'' என்கிற கேலியும், கிண்டலும் சமூக வலைதளங்களில் அதிகம் எதிரொலித்தது.

இந்நிலையில் ஐபிஎல் குறித்தும், ஐபிஎல் ஏலம் குறித்தும் இந்த சீசனில் மீண்டும் கொல்கத்தாவுக்காக விளையாடப்போகும் பேட் கமின்ஸ் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பேட் கமின்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

''ஐபிஎல் ஏலமே இப்போது பெரிய நெருக்கடியை, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பல கோடிகளுக்கு ஒரு பெளலரை எடுத்துவிட்டதாலேயே பந்து ஸ்விங் ஆகிவிடுவதோ, பிட்ச்சுகள் பெளலிங்கிற்கு சாதகமானதாகவோ, பவுண்டரி லைன் பெரிதாகவோ மாறிவிடுவதில்லை.

ஒரு போட்டியில் சரியாகப் பந்துவீசவில்லை என்றால்கூட அது பெரும் அழுத்தமாகி விடுகிறது. அடுத்தப்போட்டியில் பர்ஃபார்ம் செய்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடி ஏற்படுகிறது.

ஆனால், நான் தொடர்ந்து என்னால் என்ன பெஸ்ட்டைக் கொடுக்கமுடியும் என்றுதான் சிந்திக்கிறேன். அதைத்தான் கொடுக்கிறேன். பிரண்டன் மெக்கல்லம் எனக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பயிற்சியாளராக கிடைத்திருக்கிறார். அவருக்கு எல்லாம் புரியும், தெரியும் என்பதால் அவர் எனக்கு ஆதரவளிக்கிறார். இந்தாண்டு என்னால் எவ்வளவு சிறப்பாகப் பங்களிக்கமுடியுமோ அதை செய்வேன்'' என்று சொல்லியிருக்கிறார் பேட் கமின்ஸ்!

இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அதனால் எல்லோரது பார்வையும் இந்தாண்டு கிறிஸ் மோரிஸின் மீது விழும்.



source https://sports.vikatan.com/ipl/ipl-auctions-are-creating-pressure-says-australian-pacer-pat-cummins

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக