மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், டிவி நடிகையுமான 27 வயது பெண், ஐதராபாத் தொழிலதிபர் ஒருவர் மீது புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகார் தொடர்பாக போலீஸார் கூறுகையில், அப்பெண் அடிக்கடி படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் நாயுடு என்பவரை சந்தித்தார். இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டனர். அவர்களின் நட்பு 2018ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. விஜய் அடிக்கடி மும்பைக்கு வந்து அந்த நடிகையை சந்தித்ததாகவுய்ம் கூறப்படுகிறது. அப்படி சந்தித்த போது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறி அப்பெண்ணிற்கு ஒரு மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.
அதை அப்பெண்ணும் நம்பியுள்ளார். ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்து ஒரு லாட்ஜில் தங்கிக்கொண்டு அங்கு வரும்படி நடிகையிடம் விஜய் கேட்டுக்கொண்டார். அங்கு கட்டாயப்படுத்தி நடிகையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு 2018ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி விஜய், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள நடிகையின் வீட்டிற்கு சென்றார். அங்கு `எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?’ என்று நடிகை கேட்டதற்கு, `தனது தங்கைக்கு திருமணம் முடிவானதும் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று போலியாக உறுதியளித்தார். அதனை அவரும் நம்பியிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார் விஜய். பின்னர், அப்பெண்ணிடம் நடிக்க செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அடிக்கடி மும்பையின் பல்வேறு ஓட்டல்களில் அறை எடுத்து விஜய் அந்த நடிகையுடன் ஒன்றாக இருந்திருக்கிறார்.
Also Read: மும்பை: 73 வயதில் திருமண ஆசை; ரூ.1.3 கோடியை இழந்த முதியவர்! - பணத்தைக்கொண்டு வேறு ஒருவரை மணந்த பெண்
எனினும் அப்பெண் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். இதனால் பல நேரங்களில் பொது இடங்களில் நடிகையை விஜய் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி நடிகை வர்சோவாவில் இருந்த போது போன் செய்து தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவரை சந்திக்கசெல்லவில்லை. இதனால் அப்பெண்ணை மிரட்டியுள்ளார் விஜய். வேறு வழியில்லாமல் அவரை சென்று சந்தித்தார் அந்த பெண்.
நவம்பர் 22ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை நடிகையை கோரேகாவ் ஓட்டலில் வைத்திருந்ததோடு, அவரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி, பாலியல் ரீதியாக கடுமையாக கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த கொடுமைகளை பொறுத்துக்கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஜயிடம் கேட்டார். ஆனால் விஜய், நடிகையை மிரட்டி 15 லட்சம் கொடுக்கவில்லையெனில் தன்னிடம் இருக்கும் ஆபாச படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அதன் பிறகு நடிகை அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
ஆனால் விஜய் விடுவதாக இல்லை. கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி நடிகை மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்புக்காக சென்ற போது வீடியோ கால் செய்து மனரீதியாக துன்புறுத்தினார் . நடிகை மத்திய பிரதேசத்தில் இருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மும்பை திரும்பியதும் மீண்டும் பணம் கேட்டு துன்புறுத்த ஆரம்பித்தார். இதை தொடர்ந்தே நடிகை மும்பை டி.என்.நகர் போலீஸ் நிலையத்தில் விஜயிக்கு எதிராக தற்போது புகார் செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் ஓட்டல்களின் பெயர்களையும் நடிகை குறிப்பிட்டுள்ளார். அந்த ஓட்டல்களில் சென்று சோதனை நடத்தி நடந்த சம்பவம் உண்மையா என்பதை உறுதி செய்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். விஜயை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். காதல் என்ற பெயரில் டி.வி நடிகை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தப்பட்டதாக எழுந்திருக்கும் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/tv-actress-complaint-against-hyderabad-businessman-in-rape-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக