Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

`கூட்டணியில் இழுபறி; தீவிர ஆலோசனையில் பா.ஜ.க... மார்ச் 11-ல் தி.மு.க தேர்தல் அறிக்கை!’ #ElectionUpdates

கூட்டணியில் இழுபறி... தீவிர ஆலோசனையில் பா.ஜ.க!

கமலாலயம்

அ.தி.மு.க கூட்டணியில் இன்னும் பா.ஜ.க-வுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், சி.டி ரவி, கிஷன் ரெட்டி, தேசிய விநாயகம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

`தி.மு.க தேர்தல் அறிக்கை மார்ச் 11-ல் வெளியீடு!'

ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகள் ஒருபுறம் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக கட்சிகள் தற்போது தேர்தல் அறிக்கை பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தி.மு.க தேர்தல் அறிக்கை மார்ச் 11 -ல் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11ஆம் தேதி வெளியிடுவதாகவும், தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களை ஈர்க்கும் விதமாக தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/tamilnadu-election-2021-and-other-current-updates-03-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக