Ad

செவ்வாய், 24 நவம்பர், 2020

#Vijay65 எஸ்.ஜே.சூர்யாவை டிக் அடிக்கும் விஜய்... ஏன் தெரியுமா?!

ஒவ்வொரு முறையும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்விதான் ட்ரெண்டிங்காக இருக்கும். அப்படித்தான் விஜய்யின் 64வது படத்தை இயக்குவது யார் என்ற பட்டியலில் பலர் பெயர் இருந்தநிலையில், விஜய் டிக் செய்த பெயர் லோகேஷ் கனகராஜ்.

அதேபோல, அவரின் 65-வது படத்தை இயக்க இயக்குநர்கள் பாண்டிராஜ், மகிழ் திருமேனி, சுதா கொங்கரா எனப் பலரின் பெயர் இருக்க, ஏ.ஆர்.முருகதாஸின் பெயர் திடீர் என உள்ளே நுழைந்தது. முதல் கட்டமாக ஒன்லைன் ஓகே ஆகி, ப்ரீ ப்ரொடக்‌ஷன் துவங்கிய நிலையில் சம்பளத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் முருகதாஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, முருகதாஸ் வெளியேறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் விஜய்க்கு கதை சொல்ல, அவருக்கும் பிடித்துவிட்டது. 65-வது படத்தை இயக்குவது அவர்தான் என்ற தகவல்களும் வெளியாகத் தொடங்கின.

எஸ்.ஜே.சூர்யா

இதற்கிடையே திடீர் திருப்பமாக விஜய்யின் அடுத்தப்பட இயக்குநர் என எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் அடிபட ஆரம்பித்தது. காரணம் 'குஷி' படத்துக்கு அடுத்து மீண்டும் விஜய்யை இயக்க திட்டமிட்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. 'குஷி'க்கு அடுத்து அவர் இயக்கிய 'நியூ' படத்தில் முதலில் அஜித்குமாரும், ஜோதிகாவும் நடிப்பதாக இருந்தது. கதையில் சில விஷயங்களில் உடன்பாடில்லை என அஜித் வெளியேற, எஸ்.ஜே.சூர்யாவே ஹீரோவானார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து ஹீரோவாகவே பயணிக்கவைத்தது.

இந்நிலையில் மீண்டும் விஜய்யை இயக்க எஸ்.ஜே.சூர்யா விருப்பம் தெரிவிக்க, விஜய்யும் அவர் சொன்ன கதைக்கு ஓகே சொல்லிவிட்டார். இதனால் #Vijay65 படத்தின் இயக்குநர் நெல்சனா, எஸ்.ஜே.சூர்யாவா என்கிற கிளைமாக்ஸ் கட்டத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யாவின் பெயரை டிக் அடித்துவிட்டதாகத் தெரிகிறது. காரணம், அடுத்தப்படத்தின் ஷூட்டிங்கை ஜனவரியில் தொடங்கிவிடவேண்டும் என்பதில் விஜய், சன் பிக்சர்ஸ் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள். விஜய்யும் அடுத்தபடத்தின் ஷூட்டிங்கை ஜனவரியில் தொடங்கிவிட்டால் தேவையில்லாத சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்கலாம் என நினைக்கிறார்.

இயக்குநர் நெல்சன்

ஆனால், விஜய் படத்துக்குள் நெல்சனால் உடனடியாக வரமுடியாத நிலை. சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட வேலைகள் இன்னும் முடியவில்லை. 'டாக்டர்' படம் ஏப்ரல் மாதம்தான் வெளியாகயிருக்கிறது. இதனால் ஜனவரியில் ஷூட்டிங் போகவேண்டும் என்றால் எஸ்.ஜே.சூர்யாவே சரியான சாய்ஸ் என ஓகே சொல்லியிருக்கிறார் விஜய். அதேசமயம் எஸ்.ஜே.சூர்யாவும் சொன்னபடியே சரியான பட்ஜெட்டில் படமெடுப்பார் என்பதால் சன்பிக்சர்ஸும் ஓகே சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

இதற்கிடையே விஜய் 65 படத்தை யார் இயக்கவேண்டும் என விகடன் இணையதளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் வாக்கெடுப்பு நடத்தியிருந்தோம். இதில் வாசகர்களின் பெரும்பான்மை ஆதரவு சுதா கொங்கராவுக்கே கிடைத்திருக்கிறது.
Vijay 65

இது குறித்து விரிவாகப் படிக்க...

Also Read: #Vijay65 படத்தை யார் இயக்கலாம்? மக்களின் சாய்ஸ் யார்? #VikatanPollResults



source https://cinema.vikatan.com/tamil-cinema/sj-surya-likely-to-direct-vijay-65-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக