Ad

செவ்வாய், 24 நவம்பர், 2020

இந்த அவள் விகடனை நீங்க மிஸ் பண்ணக்கூடாது, ஏன்? ? #AllNewAvalVikatan #Aval23

23-ம் ஆண்டுல அடியெடுத்து வைக்குது உங்கள் அவள் விகடன். நிச்சயமா இது ஒரு சாதனைப் பயணம். வழியெங்கும் துணையா நின்று இந்த வெற்றியை வசப்படுத்திய வாசகிகளுக்கு நன்றியும் அன்பும்.

நாளை வரப்போற அவள் விகடன், 23-வது ஆண்டு சிறப்பிதழ். அட்டை டு அட்டை உங்களுக்குப் பிடிச்ச ஏகப்பட்ட புதிய விஷயங்கள் சேர்த்திருக்கிறோம். `நிச்சயமா, ஸ்பெஷலா இருக்கும்னு தெரியும்... அது என்னனு சொல்லுங்க பாஸ்'னு நீங்க சொல்றது கேட்குது... இதோ லிஸ்ட்டே போட்ருக்கோம் பாருங்க..!

23-ம் ஆண்டு சிறப்பிதழ்ல என்னவெல்லாம் ஸ்பெஷல்னு பாக்கலாமா?

புதிய தொடர்... ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

`இந்த ஆம்பளைங்க பொம்பளைங்கள புரிஞ்சிக்கிறதே இல்ல'னு சொல்றோம். ஆனா, பெண்கள் ஆண்களை புரிஞ்சுக்க எந்தளவுக்குப் பிரயத்தனப்பட்டிருக்கோம்? `அவங்க எப்பவுமே இப்படித்தான்'னு சகிச்சுப்போறதா நினைக்கிறோம். ஆனா, அவங்க ஏன்தான் இப்படி இருக்காங்கனு புரிஞ்சுக்க, ரெண்டடி முன்னாடி வருவோமா? அதுக்கான தொடர்தான்... ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

இந்த இதழ் டாபிக்... ப்ளே பாய், சாக்லேட் பாய்!

ஆண்களைப் புரிந்துகொள்வோம்

ப்ளே பாய்ஸ் ஏன் அப்படி இருக்காங்க? மனநல மருத்துவர்கள் ஷாலினியும் அசோகனும் இப்படி சொல்றாங்க:

``ப்ளே பாய்ஸுக்கு, ஒரு பொண்ணு தன் மேல ஆசையா இருக்கா என்ற நினைப்பே அவங்களுக்குள்ள பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த போதைக்காகவே ஒரே நேரத்துல பல பெண்களின் உணர்வுகளுடன் விளையாடுவாங்க!"

ப்ளே பாய், சாக்லேட் பாய் விஷயத்துல, இயக்குநர் பாக்கியராஜ் பொண்ணுங்களுக்கு சொல்ற மெசேஜ் என்னனா... `சாக்லெட் பாய் மாதிரி நடிக்கிற ப்ளே பாய்கிட்ட கவனமா இருங்க பொண்ணுங்களா!'

புதிய தொடர் 2... கேட்ஜெட் க்ளாஸ் ரூம்!

கேட்ஜெட் க்ளாஸ் ரூம்

`அய்யோ அம்மா... உங்களுக்கு அதப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது'னு சொல்லி பிள்ளைங்க கேட்ஜெட்ல இருந்து உங்களை தள்ளிவைக்கிறாங்களா? அதுக்கெல்லாம் ஃபுல்ஸ்டாப் வைக்கிற நேரம் வந்தாச்சு. ஆப்களை கையாள்வதுலயிருந்து சோஷியல் மீடியா அக்கவுன்ட்களை நிர்வகிக்கிறதுவரை பெண்களுக்கு A - Z சொல்லிக்கொடுக்கும் புதிய தொடர்... கேட்ஜெட் க்ளாஸ் ரூம்!

புதிய தொடர் 3... பெண்களுக்கான அரசு திட்டங்கள்!

பெண்களின் கல்வி, ஆரோக்கியம், திருமணம், தொழில், முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திட்டு இருக்குற திட்டங்கள் பல. அதுக்காக ஒதுக்கப்படுற நிதியும் அதிகம்.

பெண்களுக்கான அரசு திட்டங்கள்

ஆனா, அதைப்பத்தின தகவல்கள்கூட நம்மில் பலருக்குத் தெரியுறதில்ல. என்னென்ன திட்டங்கள், எங்க, யார்கிட்ட, எப்படி விண்ணப்பிக்கணும்..? வழிகாட்டும் புதிய தொடர்... பெண்களுக்கான அரசு திட்டங்கள்!

புதிய தொடர் 4... மெய்ப்பொருள் காண்பது அறிவு!

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆன்மிக நம்பிக்கைகளில் அறிவியல் அடங்கியிருக்குனு சொல்லப்படுறதுல உண்மை இருக்கா? அப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பிக்கைகளெல்லாம் எவை? அதுலயிருக்கிற அறிவியல் உண்மைகள் என்னென்ன? ஒளியூட்டும் புதிய தொடர்... டாக்டர் சசித்ரா தாமோதரன் எழுதும் மெய்ப்பொருள் காண்பது அறிவு! இந்த இதழ்ல டாக்டர் பேசியிருக்கிற டாபிக்... `விரதம் ஏன் உடலுக்கு நல்லது?!'

புதிய தொடர் 5... சேவைப் பெண்கள்!

சேவைப் பெண்கள்

என் வீடு, என் குடும்பம்னுதான் எல்லாரும் வாழுறோம். அந்த சராசரியை தாண்டி, `சமூகமும் என் வீடே'னு வாழ்ற சேவை மனுஷிகள் பலர். அவங்களோட தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் புதிய தொடர்... சேவைப் பெண்கள்!

லிஸ்ட் இன்னும் முடியலைங்க.... இன்னும் பல புதிய பகுதிகளும் இருக்கு!

தொழில், வேலைவாய்ப்பு, சட்டம், குடும்பம், ஆரோக்கியம், அந்தரங்கம்... இப்படி உங்களோட எந்தக் கேள்விகளுக்கும் துறை சார்ந்த நிபுணர்கள்கிட்ட பதில்கள் பெற்றுக்கொடுக்கும் புதிய பகுதி... `அவள் பதில்கள்'.

மூளைக்கு வேலைன்னா கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளுக்கு, விதம்விதமான புதிர் போட்டிகள் வரிசைகட்ட இருக்கு. ஆர் யூ ரெடி?!

`ரொம்ப எல்லாம் முதலீடு போட முடியாதுங்க, ஆனா தொழில் தொடங்குற ஆர்வம் இருக்கு. வழி இருக்கா?'னு கேட்கிறவங்களுக்கு, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி வெற்றிகண்ட பெண்கள், தங்களோட கதைகளை உங்களுக்கு வழிகாட்டியா சொல்லவர்றாங்க. இனி நீங்களும் தொழில்முனைவோர்தாங்க... ஆல் தி பெஸ்ட்!

சமையல்ல நமக்கு வர்ற சந்தேகங்களுக்கு முடிவேயில்ல. அதுக்கான பகுதிதான், `சமையல் சந்தேகங்கள்'. கெட்டுப்போகாத தேங்காய் சட்னி, மணக்கும் ஃபில்டர் காபி, பூசணம் பிடிக்காத ஊறுகாய்... இந்த இதழ்ல சந்தேகங்கள் தீர்க்கிறார் செஃப் தாமு.

`அம்மா, அவள் விகடன்ல நீங்களும் அத்தையும் படிக்க எல்லாமே இருக்கு. நாங்க படிக்க என்ன இருக்கு?'னு கேட்குற டீன் பெண்களுக்காகவே உருவாக்கியிருக்கோம்.... `2K கிட்ஸ்' பக்கங்கள். இதுல ஸ்பெஷல் என்னன்னா, இந்த பக்கங்களை உருவாக்கினதும் 2K கிட்ஸ்தான். மீடியா ஆர்வம் இருக்குற உங்க வீட்டு 2K கிட்ஸும் இதில் பங்களிக்கலாம். அது தொடர்பான விவரங்களை அவள் விகடன்ல பாருங்க.

நமக்கு பல நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க நம்ம எல்லாரோட வீடுகள்லயும், நமக்குப் பிடிச்சமாதிரி ஒரு அக்கா இருப்பாங்க இல்ல..?! அப்படி, உங்களுக்கு பல லைஃப்ஸ்டைல் குட்பிராக்டீஸ்களை சொல்லிக்கொடுக்க அறிமுகமாகுறாங்க, iஅக்கா.

சின்னத்திரை, யூடியூப், வெப்சீரிஸ் ஏரியாவுல செலிப்ரிட்டி பேட்டிகள், சேனல் ரேட்டிங், நிகழ்ச்சிகள் பற்றிய டிட்பிட்ஸ்னு உங்களை என்டர்டெயின் பண்ணும்... சேனல் சைட் டிஷ்.

#AllNewAvalVikatan
#AllNewAvalVikatan
#AllNewAvalVikatan
#AllNewAvalVikatan
#AllNewAvalVikatan
#AllNewAvalVikatan

`சரி, வாசகிகளான நாங்க எழுதுறதுக்கான பக்கங்கள் இல்லையா?'ங்கிற உங்க வாய்ஸ் கேட்குதுங்க. தயாரா இருக்கு வாங்க!

இன்னும், ஆரோக்கியம், மனநலம், அழகு, ஃபேஷன், நிதி நிர்வாகம், நகைச்சுவை, பெண்ணியம், செலிப்ரிட்டிகள்... உங்க மனம் விரும்பும் தேர்வுகளைப் பார்த்துப் பார்த்து கோத்திருக்கோம்.

#AllNewAvalVikatan

அவள் விகடனின் 23-ம் ஆண்டுப் பயணம் உங்க ஆதரவோட இனிதே தொடங்கட்டும்..!

இந்த அவள் விகடன் சிறப்பிதழைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/women/aval-vikatan-turns-23-details-of-all-new-aval-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக