காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகமது படேல் கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகட்டிவ் ஆகி குணமடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அகமது படேல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஃபைசல் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
@ahmedpatel pic.twitter.com/7bboZbQ2A6
— Faisal Patel (@mfaisalpatel) November 24, 2020
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் ஆலோசகராக இருந்த அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தவர் அகமது படேல் என ராகுல் காந்தி தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/general-news/25-11-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக