Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

கோவை: களப்பணியாளர்களுக்கு சிறப்பு காட்சி! - சர்ப்ரைஸ் கொடுத்த தியேட்டர்

கொரோனா வைரஸ் மற்றும் அதற்காக போடப்பட்ட ஊரடங்கும் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிட்டது. தமிழகத்தில் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே, கடந்த மார்ச் 17-ம் தேதியே தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு மால்கள் திறக்கப்பட்டாலும், தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தன. படிப்படியாக தளர்வுகள் அறிவிப்பிலும் தியேட்டர்களை திறப்பதற்கு தொடர்ந்து தடை நிலவி வந்தது.

கோவை தியேட்டர்
கோவை தியேட்டர்

Also Read: ``50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே!''- தியேட்டர் திறப்பு வழிமுறைகள் என்ன?!

இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஆங்காங்கே தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

தியேட்டர்களை தயார் செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடந்துவந்தது. கோவையைப் பொறுத்தவரை, பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. அதேநேரத்தில், மால்களில் உள்ள தியேட்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில், ப்ரூக் ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் கொரோனா களப்பணியாளர்களுக்கு சர்ப்ரைஸாக முதல் காட்சி இலவசமாக திரையிடப்பட்டது.

கோவை தியேட்டர்
கோவை தியேட்டர்

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் இன்று காலை அவர்களுக்கு முதல்காட்சியாக, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் திரையிடப்பட்டது.

இதுகுறித்து தியேட்டர் நிர்வாகிகள் கூறுகையில், “கொரோனா களப்பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளால் வரமுடியவில்லை. அவர்களுக்கு தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் பிரத்யேகமாக ஒரு காட்சி திரையிடப்படும். அனைத்து சிஸ்டமும் மாறிவிட்டது.

கோவை தியேட்டர்
கோவை தியேட்டர்
கோவை தியேட்டர்

ஒரு இருக்கை இடைவெளி விட்டு தான் அமர முடியும். டிக்கெட்டும் நேரடியாக வாங்க முடியாது. ஆன்லைனின் புக் செய்தால் போதும். என்ட்ரன்ஸில் க்யூ.ஆர் கோட் ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே போகலாம். விரைவில் புதுப்படங்கள் வெளியாகும் என நம்புகிறோம். அப்படி புதுப்படங்கள் வெளியானால், தியேட்டர்கள் ஓரளவுக்கு பழைய நிலைக்கு திரும்பிவிடும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-theatre-special-screening-for-covid-warriors

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக