Ad

சனி, 7 நவம்பர், 2020

கேரளா: ரூ.150 கோடி தங்க நகை மோசடி! - மஞ்சேஸ்வரம் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ கைது

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லீம்.லீக் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கமருதீன். காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லீம் லீக் இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கூட்டணியான யூ.டி.எஃப்-பின் காசர்கோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் கமருதீன் உள்ளார். கமாருதீன் சேர்மனாக இருக்கும் ஃபேஷன் ஜூவல்லரி நிறுவனத்தில் தங்க நகைகளுக்கான முதலீடு திட்டம் தொடங்கப்படிருக்கிறது. அதில் சுமார் 800 பேரிடம் இருந்து 150 கோடி ரூபாய்வரை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் வாங்கியவர்களுக்கு நகைகள் வழங்கப்படவில்லை. நகையோ அல்லது செலுத்திய பணமோ கிடைக்க வாய்ப்பு இல்லை என தெரிந்ததை அடுத்து பணம் முதலீடு செய்தவர்கள், கமருதீன் நகை மோசடி செய்திருப்பதாக சந்தேரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நகை

புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து ஏ.எஸ்.பி விவேக் குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று மாலை எம்.எல்.ஏ கமருதீன் கைது செய்யப்பட்டார். ஜூவல்லரி கோல்ட் முதலீட்டுக்காக பணம் வாங்கி மோசடி செய்யப்பட்டதாக இதுவரை 117 புகார்கள் வந்துள்ளதாகவும். அதில் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: திருவாரூர்: `ரூ.20 லட்சம் பணம்; ரூ.12 லட்சம் நகை மாயம்!’ - அதிரவைத்த கூட்டுறவு வங்கி மோசடி!

முதற்கட்ட விசாரணையில் கமருதீன் 13 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கமருதீன் மீது இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புகார்தாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மோசடி தொகையும் அதிகரிக்கும் என்கிறனர் போலீஸார். மேலும் ஃபேஷன் ஜுவல்லரி எம்.டி-யையும் கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கமருதீன்

இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கமருதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``என்னைக் கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு கூறியதால்தான் விசாரணைக் குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நோட்டீஸ்கூட வழங்காமல் என்னை விசாரணைக்காக அழைத்து, கைது செய்துள்ளனர். நான் கோர்ட்டில் அளித்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதுவரை காத்திருக்காமல் என்னை கைது செய்துவிட்டார்கள். இதன் மூலம் என்னை அரசியல் ரீதியாக தகர்க்க முடியாது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-muslim-league-mla-arrested-over-gold-cheating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக