Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

`காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன!’ - பிரதமர் மோடி #NowAtVikatan

மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள்!

மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாளை ஒட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பிரதமர் மோடி

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ``காந்தியின் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது . வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... 150 தகவல்கள்! #Gandhi150

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,484 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 63,94,069-ஆக அதிகரித்திருக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசி

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,095 மரணங்கள் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 99,773-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 53,52,078 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

Also Read: `ஆலோசகர் மூலம் பரவியதா?’ - அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மெலனியாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!



source https://www.vikatan.com/news/general-news/02-10-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக