Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

பிள்ளைகளின் மேல்படிப்புக்காக தனிநபர் கடன் வாங்குவது நல்லதா? - ஓர் எளிய வழிகாட்டல்

என் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.எஃப்) கணக்கில் ரூ.18 லட்சம் இருக்கிறது. மகளின் திருமணத்துக்கு இதிலிருந்து எவ்வளவு தொகை எடுக்க முடியும்? அந்தத் தொகைக்கு வருமான வரி உண்டா? - செந்தில், பூந்தமல்லி.

ஆர்.கணேஷ் (பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்) பதில்:

``ஏழு வருடங்கள் வைப்பு நிதி செலுத்திய உறுப்பினர் ஒருவர் தன் (தொழிலாளியின்) பங்கில் 50% வரை மகளின் திருமணத்துக்காகப் பணம் பெறலாம். பாரா 68K-யின்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக ஒருவர் தனது மொத்த பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். இந்தத் தொகைக்கு வரி கிடையாது.''

லோன்

என் மகனின் மேல்படிப்புக்காகக் கல்விக் கடன் வாங்கலாமா அல்லது சுலபமாகக் கிடைக்கும் தனிநபர் கடன் வாங்கலாமா, எது நல்லது? - மதன்குமார், தேனி

அதில் ஷெட்டி, முதன்மைச் செயல் அதிகாரி, BankBazaar.com பதில்:

``கல்விக் கடனுடன் ஒப்பிடும்போது தனிநபர் கடனுக்கான வட்டி குறைந்தபட்சம் 0.25% முதல் அதிகபட்சம் 4% வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வித்தியாசம், கடன் வாங்கும் மாணவர் மற்றும் பெற்றோரின் கிரெடிட் வரலாறு, சிபில் ஸ்கோர், வாங்கும் கடனுக்குக் கொடுக்கப்படும் சொத்து ஜாமீன் ஆகியவற்றைப் பொறுத்து மாறும்.

உதாரணத்துக்கு, 8.5% வட்டியில் 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக ரூ.5 லட்சம் கல்விக் கடன் வாங்கினால் மாதத் தவணை ரூ.10,258 ஆகும். கடன் தவணைச் சலுகை (moratorium) இல்லாதபட்சத்தில் வட்டியாக மட்டும் ரூ.1,15,500 கட்ட வேண்டிவரும்.

இதுவே, 9.5% வட்டியில், 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக ரூ.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் மாதத் தவணை ரூ.10,500 ஆகும். கடன் தவணைச் சலுகை இல்லாதபட்சத்தில் வட்டியாக மட்டும் ரூ.1,30,056 கட்ட வேண்டிவரும். இது 1% வட்டி வித்தியாசத்தில் கிட்டத்தட்ட ரூ.15,000 கூடுதலாகக் கட்ட வேண்டியுள்ளது. இதுவே, தனிநபர் கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கும்போது, அதிக தொகை வட்டிக்குச் செல்லும். தனிநபர் கடன்களை நீண்ட காலத்துக்கு அனுமதிக்க மாட்டார்கள்.

கல்விக் கடன் 8-10 ஆண்டுகளில்கூட திரும்பச் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும், கல்விக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கு வரிச் சலுகை உள்ளது. 80 இ பிரிவின்கீழ் 8 ஆண்டுகள் வரைக்கும் வட்டிக்கு வரிச் சலுகை உண்டு. இதில், எவ்வளவு வட்டி என்றாலும் வரிச் சலுகை உண்டு. தனிநபர் கடனில் இந்தச் சலுகை கிடையாது.

கல்விக் கடன் என்பது மாணவர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக உள்ளது. எனவே, படிப்பு முடியும் வரைக்கும் தவணை சலுகைக் காலம் இருக்கக்கூடும்.''

> அண்மைக் காலத்தில் இ.எஸ்.ஜி (ESG) ஃபண்டுகள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. நீண்ட கால இலக்குக்கு அவற்றில் முதலீடு செய்யலாமா அல்லது ஏற்கெனவே இருக்கும் வேறு எந்த வகை ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

> நான் பங்குச் சந்தையில் சாவரின் தங்கப் பத்திரத்தை வாங்க விரும்புகிறேன். என் 1 வயது மகளுக்காக எனது முதலீட்டில் 10% ஒதுக்கீடு வைக்க விரும்புகிறேன். பங்குச் சந்தையில் வாங்கிய பின், ஒவ்வோர் ஆண்டும் 2.5% வட்டி கிடைக்குமா, பங்குச் சந்தையில் வாங்கிய இந்தத் தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா, பங்குச் சந்தையில் வாங்கிய இந்தப் பத்திரத்தை முதிர்வுக் காலத்தில் எப்படிப் பெறுவது?

> என் 65 வயதான தந்தை, பி.எம்.வி.வி.ஒய் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் மாதம் ரூ.10,000 கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?

பங்கு சந்தை

> வீட்டின் கூரையை உயரமாக வைத்தால், வீடு நல்ல காற்றோட்டமாக இருக்குமா... இப்படிச் செய்யும்போது மின் விசிறிகளின் பயன்பாடு குறைவாக இருக்குமா?

> ஷேர் டிரேடிங் கணக்கைப் பயன்படுத்தி எவ்வளவு காலம் டிரேடிங் எதுவும் செய்யவில்லை என்றால், அது `இன்ஆக்டிவ்' ஆகும், அதை மீண்டும் எப்படிச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது?

- இந்த 5 கேள்விகள் - சந்தேகங்களுக்கான நிபுணர்களின் பதில்களை நாணயம் விகடன் இதழில் அறிய > கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை https://bit.ly/34ky1lQ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/business/investment/is-it-right-to-take-personal-loan-instead-of-education-loan-for-sons-higher-education

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக