சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்கள் வட இந்தியாவில் அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்குக்கு ஆளான பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு நாடேகொந்தளித்தது. இதுபோன்ற சில சம்பவங்கள் மட்டுமே ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வருகின்றன. பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள் வெளியே தெரிவதில்லை. பெண்கள், தங்கள் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. எனினும் இந்திய சமூக கட்டமைப்பு பெண்களின் குரல்வளையை இறுக்கமாக நெறிக்கவே தனக்கு நடந்த அநீதியை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மற்றுமொரு தலித் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
மத்தியப்பிரதேசத்தின் நரிசிங்பூர் மாவட்டம் ரிச்சை கிராமத்தில் வசித்துவந்த 32 வயதுப் பெண் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியை சேர்ந்த மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். செப்டெம்பர் 22-ம் தேதி திங்கள்கிழமை காலை கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக மருமகள்களுடன் சென்ற அப்பெண்ணை பரசு, அரவிந்த் சவுத்திரி மற்றும் அணில் ராய் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். இதுகுறித்த காவல்துறையினர் விசாரணையில் மருமகள்கள் இருவரும் ஆண்கள் அத்தையை கிண்டல் செய்ததைப் பார்த்ததாகவும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை தங்கள் பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று மாலை பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் கணவரும் கோட்டிடோரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்நிலையத்தில் இருந்த துணை ஆய்வாளர் மிஷ்ரிலால் கோடப்பா வழக்கு பதிவு செய்யாமல் இருவரையும் அனுப்பியுள்ளார். மறுநாள் காவல்துறையில் இருந்து உடலியல் சோதனை செய்வதாகவும் கூறியுள்ளனர். எனினும், அதற்குப் பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், எஸ்.ஐ கோடப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார். பின் ஜாமீன் பெற்று வெளிவந்துள்ளார்.
Also Read: ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி
மூன்று நாள்களாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனவேதனையடைந்த பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழைமை காலை தண்ணீர் எடுப்பதற்காக குழாய்க்கு சென்றுள்ளார். குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, லீலா பாய் என்னும் பெண் அவர் மனம் புண்படும்வகையில் அவரை சித்திரித்து தற்கொலைக்கு தூண்டும் வண்ணம் பேசியுள்ளார். இதனால், மேலும் மனம் நொந்த அவர் வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கடர்வரா துணை மண்டல காவல் அதிகாரி எஸ்.ஆர். யாதவ், ``இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் மிஷ்ரிலால் கோடப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் மற்றும் பார்சு சவுத்ரி மற்றும் மற்றொரு குற்றவாளி அனில் ராய் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், ``அரவிந்த் சவுத்ரி கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் தேடி வருகிறோம். லீலா பாயை கைது செய்துள்ளோம். தவிர, அரவிந்தின் தந்தை மோதிலாலையும் ஐபிசி பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) இன் கீழ் கைது செய்யப்பட்டார்" என்றும் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/crime/mp-sexual-harassment-victim-commits-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக