நாணயம் விகடன், `பங்குச் சந்தையில் வெற்றி பெற டெக்னிக்கல் அனாலிசிஸ்..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை அக்டோபர் 24-ம் தேதி மாலை 6.00 - 7.30 மணிக்கு நடத்த உள்ளது.
பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் சி.கே.நாராயண்
பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் சி.கே.நாராயண் பயிற்சியளிக்கிறார். இவர் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட்களில் குறிப்பிடத்தக்கவர். இவர், குரோத் அவென்யூஸ் (Growth Avenues) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி. இவர் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர்.
மேலும், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ரிசர்ச் அனலிஸ்ட் ஆவார்.
பயிற்சி கட்டணம் ரூ. 500 ஆகும்.
டெக்னிக்கல் அனாலிசிஸ்
பங்குச் சந்தை முதலீட்டில் ஒரு பங்கை முதலீட்டுக்கு எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதுவே அந்தப் பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் முறையில் பல வகைகள் உள்ளன. இவற்றில் எந்த முறை, எந்தச் சந்தை சூழ்நிலைக்கு ஏற்றவை என்பதை அறிந்து செயல்படுவது அவசியம். அதற்கு உங்களுக்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்திருப்பது அவசியம்.
இந்தப் பயிற்சி வகுப்பில் நாட்டில் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் டாக்டர் சி.கே.நாராயண், டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றித் தமிழில் விளக்கம் தருகிறார்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தி பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க விரும்புவர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி.
முன் பதிவு செய்ய: https://bit.ly/33cNIw8
source https://www.vikatan.com/business/share-market/naanayam-vikatan-conducts-share-market-technical-analysis-training
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக