Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

``என் கணவர் நிச்சயம் ஜெயிப்பார்!''- காரைக்குடி மணிக்கு உதவும் மனங்கள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் அப்பா, தங்கச்சி, மனைவியுடன் வாழ்க்கை நடத்திவருகிறார், அந்த மாற்றுத்திறனாளி இளைஞர். வீரபத்ரமணிக்கு 25 வயதுதான். ஆனால், பெரிதாக இயங்கமுடியாத அளவுக்கு முடங்கியுள்ளது அவரின் உடல் வாகு. பிறந்த 3 மாதத்தில் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம்தான் இப்படி அவர் கஷ்டப்பட காரணமாக இருக்கிறது. வீரபத்ரமணி வாழ்க்கையில் தனியாக நின்றபோது அன்பையும், காதலை கொடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அவரது மனைவி சுமதி.

மணிக்கு கிடைத்த உதவி

உடலில் எந்தக் குறையும் இல்லாத சுமதி வீரபத்திர மணியை காதல் திருமணம் செய்துகொண்டு பலரையும் நெகிழ்ச்சிடைய செய்துள்ளார். இந்நிலையில் இது குறித்து விகடன் இணையதளத்தில் "நொண்டி, நுடமா இருக்க என்ன நீ கட்டிக்கிவியா?!"- ஒரு தெய்வீக காதல் கதை" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் வீரபத்ரமணியின் நிலை குறித்து பலரும் நெகிழ்ச்சியுற்று உதவி செய்துள்ளனர்.

Also Read: "நொண்டி, நுடமா இருக்க என்னை நீ கட்டிக்குவியா?!"- ஒரு தெய்விகக் காதல் கதை!

இது குறித்து வீரபத்ரமணியின் மனைவி சுமதி நம்மிடம், "என் வீட்டுக்காரர் திறமையானவர். ஆனால் அவரிடம் போதிய வசதி இல்லை. மாற்றுத்திறனாளியா இருந்தாலும் உழைத்து வாழவேண்டும் என நினைத்தார். ஆனால் கைகொடுக்க ஆள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவரைப் பற்றி செய்தி வெளியானதால் பலரும் உதவி செய்துள்ளனர். அவர் செல்போன் சர்வீஸ், மிக்சி, கிரைண்டர், ஏர் கூலர், கரன்ட் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களும் பழுது நீக்குவார்.

மணிக்கு உதவி
மணியின் கடை

இந்நிலையில் என் கணவர் தொழில் செய்ய வாடகைக்கு கடையும், எலக்ட்ரானிக் பொருட்களும் வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், மூன்று சக்கர சைக்கிளும் எனப் பலரும் உதவி செய்துள்ளனர். மேலும் நாங்கள் புதிதாக குடிபுகுந்துள்ள வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன், கணேஷனும் தேவையான உதவிகள் செய்துள்ளனர். இதனால் எங்களால் அடுத்த கட்டத்திற்கு நகர முடிந்துள்ளது. என் கணவர் நிச்சயம் அவருடைய தொழிலை நல்ல படியாக செய்து உதவி செய்தவர்களின் மனதில் இடம்பிடிப்பார்" என்றார்.



source https://www.vikatan.com/news/miscellaneous/sivagangai-physically-challenged-mani-gets-help

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக