Ad

சனி, 24 அக்டோபர், 2020

அமெரிக்கா: `நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால்... கொரோனா தடுப்பூசி இலவசம்!’ - ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான நாளை நோக்கி உலகமே காத்துக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களத்தில் ஆட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான இறுதி விவாதமானது நேற்று பல்வேறு காரசாரமான வாதங்களுடன் நடந்து முடிந்தது.

ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் பல்வேறு விவாதங்களில் ட்ரம்ப் மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகளை மேற்கோள் காட்டி விமர்சித்துப் பேசி வந்தார். இதற்கு ட்ரம்ப்பும் பல்வேறு விதமாக எதிர்வாதம் செய்தார்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த பிரசாரத்தில் ஜோ பைடன், ``நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் விரைவாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உறுதிசெய்யப்பட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.

ஜோ பைடன்

``குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்ப்பும் இதே வாக்குறுதியை அளித்திருந்தாலும், அவர் கொரோனாவின் தீவிரத்தினை அறிந்திருந்தும் தடுப்புப் பணிகளில் மெத்தனமாக இருந்ததால் அமெரிக்கா தற்பொழுது 2,23,000 குடிமக்களை இழந்துள்ளது.

சமீப காலத்தில், நாம் கண்ட கொள்ளை நோய்களில் கொரோனா மிகவும் அபாயகரமானது. மேலும், ட்ரம்ப் கூறுவது போல இதன் தொற்று எண்ணிக்கையானது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் குறையும்படியாகத் தெரியவில்லை. நாளுக்குநாள் அதன் வீரியமானது உயர்ந்துகொண்டேதான் உள்ளது” என்று குற்றம்சாட்டினார் பைடன்.

“கொரோனா தொற்றானது அமெரிக்காவில் கண்டறியப்பட்டு 8 மாதங்கள் ஆகியும், தற்போதைய அதிபர் ட்ரம்ப் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான எவ்வித முயற்சியையும் எடுத்ததாக தெரியவில்லை” என்று ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 77 வயதுடைய முன்னாள் துணை அதிபர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய ஜோ பைடன், `நான் அதிபராக பதவியேற்றால், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியினை அவசரகால சட்டமாக அமல்படுத்தி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்புவதற்கு வழிவகை செய்வேன்’ என்றார்.

விவாதம்

மேலும், `அமெரிக்காவின் ஆளுநர்களுடன் கலந்தாலோசித்து, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து அம்சங்களும் அடங்கிய உடனடி மசோதாவை அமல்படுத்துவதற்கான முயற்சிகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/joe-biden-promises-free-vaccines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக