Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

பேரிடர் காலத்தில் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை என்ன? வழிகாட்டும் நிபுணர்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `பேரிடர் காலத்தில் முதலீட்டாளர்கள், நிதி மற்றும் உணர்வு ரீதியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்துகின்றன.

முதலீட்டு திருவிழா

அக்டோபர் 18, காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர், கல்வி பிரிவு தலைவர் கே.எஸ்.ராவ், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், நிதி ஆலோசகர் பி.வி.சுப்பிரமணியம் ஆகியோர், `பேரிடர் காலத்தில் முதலீட்டாளர்கள், நிதி மற்றும் உணர்வு ரீதியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள்’ என்கிற தலைப்பில் விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர், கல்வி பிரிவு உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் நடுவராகச் செயல்படுகிறார்.

Mutual funds

அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதேசமயம், கோவிட் 19 பாதிப்பு நாம் மேற்கொள்ளும் முதலீட்டின்மீது தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும், உணர்வுரீதியாக முதலீட்டாளர்கள் எப்படி சரியாக முடிவெடுக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் எனத் துறைசார்ந்த நிபுணர்கள் வழிகாட்டும் இடம்தான் இந்த நிகழ்ச்சி.

இதில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்!

பதிவு செய்ய: https://bit.ly/34zqJL7



source https://www.vikatan.com/business/investment/nanayam-vikatan-and-aditya-birla-mutual-fund-conducts-guidance-program-for-investors

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக