Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

இன்று முதல் `வல்லமை தாராயோ'... இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக யூடியூப்பிற்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கி இருக்கும் டெய்லி சீரிஸ், ‘வல்லமை தாராயோ.’ காத்தாடி ராமமூர்த்தி, ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் தற்போது யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் ஷாலி நிவேகாஸ், கெளசிக், பார்வதி, அப்துல் என மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'கோலங்கள்' புகழ் திருச்செல்வம் கதை மற்றும் திரைக்கதை எழுத, 'எமர்ஜென்ஸி' வெப் சீரிஸ் புகழ் சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியிருக்கிறார்.

வல்லமை தாராயோ
இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பெண்கள் எப்படி பல தடைகளைத் தாண்டி, வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள், கட்டாயத் திருமணத்தின் விளைவுகள்... என நிறைய விஷயங்களைப் பேசவிருக்கும் இந்தத் தொடர் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ஒன்றாக இருக்கும்.

இன்று முதல், திங்கள் - வெள்ளி வரை இரவு 7 மணிக்கு விகடன் டிவி யூடியூப் சேனலில் இந்தத் தொடர் வெளியாகும். இதன் டிரெய்லர் உங்கள் பார்வைக்கு...


source https://cinema.vikatan.com/television/vallamai-tharayo-trailer-released-by-siva-karthikeyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக