Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

டிஜிட்டல் டெய்லி சீரிஸ் -`வல்லமை தாராயோ'... வெளியானது இரண்டாவது மோஷன் போஸ்டர்!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸாக விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து தயாரிக்கும் 'வல்லமை தாராயோ' யூடியூபில் வெளியாகவிருக்கிறது. ஷாலி நிவேகாஸ், கௌஷிக், விஜே பார்வதி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, 'கோலங்கள்' புகழ் திருச்செல்வம் கதை மற்றும் திரைக்கதை எழுதுகிறார். சிதம்பரம் மணிவண்ணன் இயக்குகிறார். இவர் அனிதா சம்பத் நடித்த 'எமர்ஜென்ஸி' வெப் சீரிஸை இயக்கியவர்.

வல்லமை தாராயோ

Also Read: உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் `வல்லமை தாராயோ' டைட்டில் பாடல் ப்ரோமோ!

ஏற்கெனவே இதன் ஃபர்ஸ்ட் லுக், முதல் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் பாடல் ப்ரோமோ வெளியான நிலையில் தற்போது இரண்டாவது மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

`வல்லமை தாராயோ'வின் இரண்டாவது மோஷன் போஸ்டர்...


source https://cinema.vikatan.com/television/digital-daily-series-vallamai-tharayo-second-motion-poster-released

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக