Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

Air India One: IAF விமானிகள்; மணிக்கு 900 கி.மீ வேகம்! - போயிங் 777-ல் என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் விவிஐபி-களுக்காக போயிங் 747 விமானம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் மட்டுமே பயன்படுத்த "ஏர் இந்தியா ஒன்" எனப்படும் போயிங் 777 வகை விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது. அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் வரிசையில் இந்தியா இப்போது போயிங் 777 விமானத்தை கொண்டுள்ளது.

கடந்த 25 வருடங்களாக பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் போயிங் 747 ரக விமானத்திலேயே பயணம் செய்துவருகின்றனர். 2006-ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இரண்டு பி777 ரக விமானங்களைத் தயாரித்து அனுப்ப வேண்டும். ஆனால் 2006-ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விட இப்போது விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-2020 இடையிலான காலத்தில் மட்டுமே இதன் விலை $55.3 மில்லியன் அதிகமாகியுள்ளது. தற்போது இதன் விலை $375.5 மில்லியன்.

மோடி வெளிநாட்டு பயணம்!

இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் (AI - 1) என்ற அடையாளத்துடனேயே பறக்கும். ஏர் இந்தியா ஒன் என்பது இந்திய நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் பயணிக்கிறார்கள் என்பதைக் குறிக்கும். இந்த இரு விமானங்கள் ஜூலை மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமானங்கள் ஒப்படைப்பதற்கு தாமதமாகி தற்போது ஒரு பி777 விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து கிளம்பி 15 மணி நேர பயணத்திற்கு பின் நேற்று டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதற்கு முன்பு இருந்த பி 747 விமானங்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய விவிஐபிக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி வர்த்தகப் பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால் பி 777 சிறப்பு விமானங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட விவிஐபிக்கள் மட்டுமே பயணிப்பார்கள். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அந்த பங்குகள் விற்பனையானால், ஏர் இ்ந்தியா விமானங்களை பயன்படுத்த முடியாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் களம் இறங்கி இருக்கும் ஏர் இந்தியா ஒன் பி 777 ன் கூடுதல் சிறப்புகள்:-

இந்தியாவின் புதிய போயிங் 777 விமானங்களை ஏர் இந்தியா விமானிகள் இயக்கப்போவதில்லை. அந்த விமானங்களை இந்திய விமானப்படையின் விமானிகள்தான் இயக்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இரு விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா இஞ்சினீயரிங் சர்வீஸ் லிமிட் (AIESL) நிறுவனம் பராமரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு விமானங்களிலும் Anti missile defense system, Large Aircraft Infrared Countermeasures (LAIRCM), SPS (self-protection suites) பாதுகாப்பு அறைகள் மற்றும் பிற பாதுகாப்பு வசதிகள் உண்டு. இவை இருப்பதால்தான் இதை இந்திய விமானப்படை இயக்கவுள்ளது.

அமெரிக்காவிடமிருந்து $190 மில்லியனுக்கு இரண்டு பாதுகாப்பு அமைப்புகளை (defence systems) வாங்கியுள்ளது இந்தியா.

கான்ஃபரென்ஸ் அறைகள், Wifi வசதி, மருத்துவ அவசரத்திற்கான பிரிவு எனப் பிற அம்சங்களும் உண்டு. அவசர நேரத்தில் நடுவானிலேயே இதற்கு எரிபொருள் நிரப்ப முடியும்.

நடுவானில் பயணத்தில் இருக்கும் போது, விமான தாக்குதல் ஏற்பட்டால் பி777 விமானம் எதிர் தாக்குதலைத் தொடங்கலாம், இது ஏர் ஃபோர்ஸ் ஒன்னின் ராணுவ வழிமுறைகளைப் போன்றது. ரேடார் அதிர்வெண்களை சந்தேகிப்பதற்கும் ஏவுகணைகளை கண்டுபிடிப்பதற்கும் போயிங் 777 ல் வழிமுறைகள் உள்ளன.

Air India One

போயிங் 777 ஏர் இந்தியா ஒன் விமானம், மணிக்கு 900 கி.மீ வேகத்தில் பறக்கும். ஆரம்ப கட்டத்தில் ஏர் இந்தியா விமானிகள் இந்திய விமானப்படையுடன் பறக்கவுள்ளனர். பிறகு, இந்த விமானம் Indian Air Force -க்கு ஒப்படைக்கப்படும், பிபி IAF விமானிகள் இந்த விமானங்களை இயக்குவார்கள்.

747 ரக விமானங்களில் 10 மணி நேர பயணத்துக்குப் பின் மீண்டும் எரிபொருள் நிரப்ப வேண்டும். ஆனால் 777 ரக விமானங்களில் 17 மணி நேரம் தொடர்ச்சியாக பறக்கலாம்.



source https://www.vikatan.com/news/general-news/air-india-one-flight-will-be-operated-by-iaf-pilots

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக