Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2020

9 துர்கைகளும் அவர்களைத் தொழுவதால் உண்டாகும் நன்மைகளும்... நவராத்திரியில் நவதுர்கா வழிபாடு!

நலம் தரும் நவராத்திரி வழிபாடு இந்த ஆண்டு ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை (17-10-2020) முதல் நவமி (25-10-2020) வரை கொண்டாடப்பட்டு, அடுத்த நாள் (26-10-2020) விஜயதசமியுடன் நிறைவுறுகிறது.

இந்த ஒன்பது நாள்கள் நவராத்திரி வைபவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துர்கையை வழிபடுவது வழக்கம். துர்சக்திகளை ஒவ்வொரு வடிவமாக எடுத்து அன்னை சக்தி அழித்ததால் தீமைகளை ஒழிக்கும் வடிவமாக துர்கை வணங்கப்படுகிறாள். தீமைகள் ஒழிந்தால் நன்மைகள் பெருகும் அல்லவா! துர்கைகளின் வடிவங்களும் அவர்களைத் தொழுவதால் உண்டாகும் நன்மைகளையும் காண்போம்.

நவராத்திரியில் ஒன்பது நாள் வழிபாடு எதற்காக?

முதல் நாள் – ஷைலபுத்ரி

மலைமகள் என்று தமிழில் வழங்கப்படுபவள். நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். இவள் ஹிமாவதி, பார்வதி, சதி, பவானி என பல பெயர்கள் கொண்டவள். தட்சனின் மகளாக பிறந்ததால் தாட்சாயினி என்றும் அழைப்பர். ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக எழுபவள். நந்தி வாகனமாகவும், சூலம் தாங்கிய இவள், பிள்ளை வரமருளும் பேருபகாரி என்று போற்றப்படுபவள்.

இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி

ஞான வடிவான இவளே இரண்டாம் நாளுக்குரிய தேவி. ஈசனை நோக்கி தவமிருந்ததால் இவள் ஞான தபஸ்வியாக விளங்கினாள். இவளே தென்னகத்தில் கன்னியாகுமரி என்று வணங்கப்படுகிறாள். இவளை வணங்கினால் கலைகளில் தேர்ச்சியும் ஞானத்தில் உச்சத்தையும் அடையலாம்.

மூன்றாம் நாள் – சந்தரகாந்தா

நவராத்திரி அன்னையரில் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டும் இவள் ஈசனைப்போலவே சந்திர பிறையை அணிந்தவள். எப்போதும் போருக்குத் தயாராக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவள். பத்து கரங்களும் கூர்மையான ஆயுதங்களும் கொண்ட இவள் நீதியின் தேவி. பாதிக்கப்பட்டவர் எவரும் இவளை தஞ்சமடைந்தால் நீதி வழங்கும் அதிகாரி இவள். வழக்குகளில் வெற்றி பெற, எதிர்களின் துன்பத்திலிருந்து விடுபட இவளை வணங்கலாம்.

நான்காம் நாள் – கூஷ்மாண்டா

சிம்ம வாகினியாய், ஜகன் மோஹினியாய் வீற்றிருக்கும் தேவி இவள். எட்டு கரம் கொண்டவள். அதில் பாசம், அங்குசம், வில், சூலம் அமிர்த கலசம் ஏந்தியவள். அஷ்ட சித்தியையும், நவ நிதியையும் அளிக்கும் தேவி இவள். ஐஸ்வர்யங்கள் பெருக தரித்திரம் ஒழிய இவளை வணங்குவது வழக்கம். வசியமாகும் தேவி இவள் என்பதால் இவளை வணங்குபவர் எண்ணிய யாவும் நிறைவேறும். அழகும் தேஜஸும் உயர்ந்து விளங்குவர். இவளை வணங்குபவர் வாக்கில் மேன்மை அடைந்து சொல் மற்றும் செயல் வீரராகவும் விளங்குவர் என்பர்.

நவதுர்கா ஹோமம்

ஐந்தாம் நாள் – ஸ்கந்தமாதா

முருகனின் தாயாகவும், அவன் கை வேலாகவும் திகழ்பவள் இந்த தேவியே. நான்கு கரங்களை கொண்டவள். அதில் இரு கரங்களில் தாமரை மலரும், ஒரு கரம் பக்தருக்கு ஆசியும் வழங்கும். இவள் மடியில் ஆறுமுகன் அமர்ந்து அருளாசி தருவார். இருவரையும் சிங்கம் தாங்கி நிற்கும். சில சமயம் இவள் தாமரை மலர் மீது அமர்ந்து அருள்வதால் இவளை பத்மாசினி என்றும் சுஹாசினி என்றும் வணங்குவர். இவளை வணங்கினால் மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். மோட்சமும் முக்தியும் அளிக்கும் தேவி இவள்.

ஆறாம் நாள் – காத்யாயனி

இவளே மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினி என்றும் போற்றப்படுபவள். துர்கை வடிவினள் என்றாலும் அபயம் அளிக்கும் தயாபரியாகவும் இவள் விளங்குபவள். இவளை வழிபட்டால் நோய் -நொடிகள் விலகும். பூர்வ ஜன்ம பாவங்களும் விலகி நன்மை சேரும். சகல தோஷங்களும் ஒளி கண்ட இருளாக மறையும். பதவி உயர்வு, தொழில் விருத்தி, உத்தியோக வாய்ப்பு, வெளிநாட்டு யோகம் போன்ற லௌகீகத் தேவைகள் அத்தனையும் அளிக்கும் தேவி இவள். மேலும் இவளை வணங்கிட தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும்.

ஏழாம் நாள் – காளராத்ரி

துர்கையரில் அதி ரௌத்திர வடிவம் கொண்டவள் இவள். காலத்தின் முடிவு என்ற பொருள் கொண்ட காள ராத்ரி சத்ருக்களை ஒழிப்பவள். தீய சக்திகளை, எதிர்மறை எண்ணங்களை அழிக்க வல்லவள். குடும்பத்தில் நிலவும் சண்டை - சச்சரவுகள், மன நிம்மதியின்மை போன்றவற்றை அகற்றுபவள். இவளை வணங்கினால் உடலையும் மனதையும் வலிமையாக்கி வளம் அருள்பவள். நான்கு கரம் கொண்டு வஜ்ராயுதமும், வாளும் தாங்கி அபய வர கோலம் கொண்டவள். கழுதை வாகனத்தில் வருபவள். இவளின் பார்வை பட்டாலே தீமைகள் பயந்து ஓடும் என்பர். தீமைகளை ஒழிப்பதால் இவளை சுபங்கரி என்று தொழுவர்.

எட்டாம் நாள் – மஹாகௌரீ

வெண்மை நிறமும் இனிய சுபாவமும் கொண்ட தேவி இவள். இவளே ஈசனை மணந்த மகா சக்தி. ஆதி வடிவான இவள் திருமண வரமருளும் சுபதேவி. இவளின் நான்கு கரங்களில் ஒரு கரம் சூலத்தையும், மறு கரம் மணியையும் தாங்கி அருளும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம்-வரம் அளிக்கும். வெண்மையான காளை வாகனத்தில் அமர்ந்து வருபவள் இவள். இவள் கடைக்கண் நம் மீது பட்டாலே போதும், வாழ்வு வசந்தமாகும் என்பர். பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவாள் என்பதால் இவள் மாரியின் அம்சமாகவும் போற்றப்படுகிறாள்.

ஒன்பதாம் நாள் – ஸித்திதாத்ரி

அட்டமா ஸித்திகளையும் அளிப்பவள் இவளே. தாத்ரி என்றால் அளிப்பவள் என்றே பொருள். இவளை வழிபட்டால் எந்த போட்டிகளிலும் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. சித்தபுருஷர்கள் வழிபடும் வாலை இவளது அம்சமே. மனோன்மணி என்று நாம் இவளை வணங்குவதும் வழக்கம். தாமரை மலரில் அமர்ந்து கதை, சக்கரம், தாமரை, சங்கு என நான்கு கரங்களில் ஏந்தியவள். சிம்ம வாகனத்தில் அமரும் இவளை அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகவும் வணங்கலாம். இவளை வணங்க வாழ்வில் பேரானந்தம் என்னும் பேற்றை அடையலாம். தேவை என்ற ஒருநிலையே இல்லாத பேரின்ப வாழ்வை அளிக்கும் சூட்சும தேவி இவள்.

நவதுர்கா ஹோமம்

நவதுர்கா ஹோமம்

இப்படி ஒன்பது நாளும் இந்த தேவியை ஆராதிக்கும் வழிபாட்டை ஒருங்கே அளிக்கவிருக்கும் வைபவம் தான் நவதுர்கா ஹோமம். இந்த நவதுர்கா ஹோமத்தில் பங்கேற்று சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் எதிரிகளின் தொல்லை, கடன் பிரச்னை, பெருந்தொற்றுப் பிணிகள் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றன சாஸ்திரங்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிலாக்கியமான ஹோமம் நவதுர்கா ஹோமம். இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்தவர் வீட்டில் வறுமை அண்டாது. அச்சம், கவலை, அவநம்பிக்கைகள் சூழவே சூழாது என்பது உண்மை. உங்களின் வாட்டி வதைக்கும் எந்தத் துன்பத்துக்கும் இந்த ஹோமம் நிச்சயம் ஒரு தீர்வை அளிக்கும். அம்பிகையை நம்புங்கள், ஆதரவுகள் பெருகும். வளங்கள் சேரும்.

நலமருளும் நவராத்திரி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் பெரிய வெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சித்தர் பீடமும் இணைந்து நடத்தும் நவதுர்கா ஹோமம், செங்கல்பட்டு மாவட்டம் பெரியவெளிக்காடு கிராமம் அருள்மிகு வெக்காளி அம்மன் ஆலயத்தில் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வாசகர்களும் பங்கேற்று சங்கல்பிக்கலாம்.

டாலர்

வாசகர்களின் கனிவான கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.301/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), பெரியவெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட அம்மன் டாலருடன் கூடிய காப்பு ரட்சை ஆகியவை ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம - வழிபாட்டு வைபவங்கள் (19.10.20 திங்கள் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/functions/nava-durga-homam-to-be-conducted-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக