Ad

சனி, 17 அக்டோபர், 2020

நீட்: `தேர்வெழுதியது 3,536 பேர்; தேர்ச்சி 88,889!’ - சர்ச்சையால் திருத்தப்பட்ட பட்டியல்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த முடிவுகளில் மாநிலவாரியாக தேர்ச்சிபெற்றவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வு குளறுபடி

நாடு தழுவிய அளவில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்ற மாநிலமாக திரிபுரா குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 88, 889 எனவும் தேர்ச்சி விகிதம் 56.62 சதவிகிதமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வெழுதிய நிலையில், 37,031 பேர் தேர்ச்சிபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தெலங்கானா மாநிலத்தில் தேர்வெழுதிய 50,392 பேரில் 1,738 பேர் தேர்ச்சிபெற்றதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், தேர்ச்சி விகிதம் 49.15 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது.

Also Read: `நாங்க இனி டாக்டர் ஆகவே முடியாதா?!' - நீட் சிதைத்திடாத ஒரு தலைமுறையின் கேள்வி

இதையடுத்து, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து இந்தப் பகுப்பாய்வு முடிவுகள் நீக்கப்பட்டன. சில மணிநேரத்துக்குப் பின்னர் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. முந்தைய பட்டியலில் டஇருந்த தவறுகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு முடிவு - திருத்தப்பட்ட பட்டியல்

`நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நீட் போன்ற முக்கியமான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏன் இந்தக் குளறுபடி. அவ்வளவு அலட்சியம் ஏன்?’ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். `இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை விளக்கமளிக்க வேண்டும்’ என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/neet-results-analysis-data-controversy-nta-upload-corrected-data

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக