Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

`ஆன்லைன் மூலம் 18 லட்சம் பேர் தி.மு.க-வில் சேர்ந்துள்ளனர்!’ -துரைமுருகன்

வேலூர் சேண்பாக்கம் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்து உறுப்பினர் அட்டையை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ``பொதுச்செயலாளர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. சுமார் இரண்டு கோடி பேர் இருக்கிற கட்சியில் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் ஆகியோர் இருந்த இடத்தில் என்னை உட்கார வைத்திருக்கிறார்கள்.

துரைமுருகன்

அதற்கு காரணம், காட்பாடி தொகுதியில் இருக்கக்கூடிய நீங்கள் தந்த ஆதரவுதான். காட்பாடி தொகுதியில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து எனக்கு பெருமைச் சேர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

Also Read: `தேர்தல் நேரத்தில் கூட்டணி உடையலாம்!’ - துரைமுருகன் சூசகம்

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் இதுவரை 18 லட்சம்பேர் தி.மு.க-வில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆதார் அட்டையில் தமிழ் மொழி நீக்கப்பட்டது குறித்து தி.மு.க உறுப்பினர்கள் மூலமாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்.

துரைமுருகன்

கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை’’ என்றவரிடம், `7.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்காவிட்டாலும் பாதிப்பு இல்லை என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்களே?’’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த துரைமுருகன்,``கொரானாவினால்கூட பாதிப்பு இல்லை என்றுதான் பி.ஜே.பி சொல்கிறது’’ என்று தனது பாணியில் நகைத்துவிட்டுச் சென்றார்.



source https://www.vikatan.com/news/politics/18-lakh-people-have-joined-dmk-via-online-says-durai-murugan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக