கரூர் மாவட்டம், நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது, உயிரிழந்தார். அவரின் உடல் பா.ஜ.க சார்பில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கரூருக்குக் கொண்டுவரப்பட்டு, எரியூட்டப்பட்டது. அப்படி, உயிரிழந்த கனகராஜின் வீட்டுக்கு வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரின் தாய், சகோதரி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பிறகு, வசூலிக்கப்பட்ட நிதியில் மீதமிருந்த தொகையான ரூபாய் ஐந்து லட்சத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பெரம்பலூரில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள்மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பா.ஜ.க சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ.க-வினரை வன்முறையை நோக்கி தி.மு.க-வினர் தள்ள வேண்டாம். தமிழக அரசு, பல்கலைக்கழகங்களில் தலைவர் பதவியில் ஆளுநரின் அதிகாரத்தை நீக்கிவிட்டு, முதல்வரை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது. இது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. டி.என்.பி.எஸ்.சி தலைவராக 61 வயதான சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க கூறுகிறது. வயது முதிர்வு காரணமாக, ஆளுநர் அந்த நியமனத்துக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில், அரசியல் காழ்புணர்ச்சி இல்லை. அவர் இன்னும் அமைச்சராக நீடிப்பதால், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருக்கிறார். மேலும், வருமான வரி சோதனையின்போது, அதிகாரிகளை தி.மு.க-வினர் தாக்கியிருக்கின்றனர். அதனால்தான் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதியின் உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜாமீன் கேட்டு தற்போது உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தமிழக முதல்வர் ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான ராகுல் காந்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அவர் மறுக்கிறார். பா.ஜ.க-வுக்கு நல்ல எழுச்சி இருக்கிறது. அதன் வெற்றி வரும் 2024 தேர்தலில் தெரியும். எடப்பாடியை மட்டும் என்று இல்லை. ஒவ்வொரு கட்சிக்காரர்களும் பிரதமராக வர வேண்டும் என தங்கள் தலைவர்களை நினைத்து ஆசைப்படலாம். ஆனால், மோடியுடன் ஒப்பிட்டு யாரைப் பற்றி பேசினாலும், எனக்கு சிரிப்புதான் வருகிறது" என்றார்.
கிருஷ்ணகிரி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.செல்லகுமாரின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து 'என்ன செய்தார் எம்.பி?' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க...
அ.செல்லகுமாரின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன... பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள்.
`அர்ப்பணிப்புடன்கூடிய கடின உழைப்பு இருந்தால் எதுவும் சாத்தியமே!’ - அமெரிக்க கால்பந்து வீரர் டிமோத்தி வீஹ் (Timothy Weah).
சாமுவேல் எல். ஜாக்சன் (Samuel L. Jackson)... சினிமா ரசிகர்கள் அத்தனை பேரும் அறிந்த பெயர். 1972-ல் அவர் நடித்த `டுகெதர் ஃபார் டேஸ்’ (Together for Days) தொடங்கி, கடைசியாக வெளியான `தி கில் ரூம்’ (The Kill Room) வரை அத்தனையிலும் அபாரமான நடிப்பு; கதாபாத்திரமாகவே மாறிவிடும் மாயாஜாலம். இதுவரை 163-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இவை தவிர தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருக்கிறார். வீடியோ கேம், அனிமேஷன் படங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். ஆஸ்கர் விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். இதற்கெல்லாம் அடிப்படை நடிப்பில் அவர் காட்டிய அக்கறை, அர்ப்பணிப்பு உணர்வு.
சில மனிதர்களுக்கு நல்ல பக்கங்களைப்போலவே எதிர்மறையான பக்கமும் இருக்கும். ஜாக்சனுக்கும் அது உண்டு. ஒருகாலத்தில் மது, கோகெய்ன், ஹெராயின் உட்பட போதை வஸ்துகளுக்கு அடிமையாகியிருந்தவர் அவர் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். எல்லோருக்குமே வாழ்க்கை சறுக்கும்தான். அந்தச் சறுக்கலில் சிக்கி புதைகுழியில் புதைந்துபோய்விடாமல், அதிலிருந்து மீண்டெழுந்ததால்தான் சாமுவேல் ஜாக்சன் ரசிகர்களின் மனதில் தடம் பதித்து, நிலைத்து நிற்கிறார். ஜாக்சனுக்கு இளம் பருவத்து வாழ்க்கை அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை.
1948-ல் வாஷிங்டனில் பிறந்தார். ஏதோ பிரச்னை... அப்பா, குடும்பத்தைவிட்டு விலகி, கான்சாஸ் நகரில் வாழ்ந்துகொண்டிருந்தார். குடிப்பழக்கம் வேறு இருந்தது. அம்மா, ஒரு ஃபேக்டரி தொழிலாளி. அம்மாவை அதிகம் பார்க்கவே முடியாது. பாட்டியின் அரவணைப்பில்தான் வளர்ந்தார் ஜாக்சன். அவர், `என்னுடைய வாழ்நாளில் அப்பாவை இரண்டே முறைதான் பார்த்திருக்கிறேன்’ என்று குறிப்பிடுகிறார். ஒருகட்டத்தில் இறந்துபோனார் அப்பா. வீட்டில் ஒரு பக்கம் வறுமை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. வெளியே இனவெறி அவரைப் பெரும் துயரத்துக்கு ஆளாக்கிக்கொண்டிருந்தது. அவர் `Benga People' எனப்படும் ஆப்பிரிக்கப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அதனாலேயே கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என முத்திரை குத்தப்பட்டு, பலரின் வெறுப்புக்கும், கேலிக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளானார். அத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் தனக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருப்பதை சிறுவயதிலேயே கண்டுகொண்டார். எத்தனையோ இக்கட்டான சூழலில் கலை என்கிற அந்தச் சிறு பொறியை அணையவிடாமல் பத்திரமாகப் பாதுகாத்தார்.
`அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இல்லாத திறமை, ஒன்றுமில்லை. அர்ப்பணிப்பும் ஒழுக்கமுமேகூட ஒரு திறமைதான்.’ - பிரபல பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் லூக் கேம்ப்பெல் (Luke Campbell).
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சாமுவேல் ஜாக்சனுக்குள் ஒரு கலைஞன் மிளிர்ந்தான். பிரெஞ்ச் கார்ன், பிக்கோலா, ட்ரம்பட், புல்லாங்குழல் எனப் பல இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார் ஜாக்சன். இசையும் நடிப்பும் சிக்கல், சிடுக்குள்ள வாழ்க்கையில் பெரிய இளைப்பாறுதலைத் தந்தன. அவருடைய பாட்டி படிப்பின் அருமையை உணர்ந்திருந்தார். ஜாக்சனைப் படிக்கத் தூண்டினார். அட்லாண்டாவில் இருக்கும் மோர்ஹவுஸ் காலேஜில் அவரைச் சேர்த்துவிட்டார். மரைன் பயாலஜி மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பு. சமூகத்தின் மேல் அவருக்கு இயல்பாகவே இருந்த அக்கறை சில போராட்டங்களிலும் அவரை ஈடுபடவைத்தது. அதுவே அவருடைய படிப்புக்கு வினையாகவும் ஆனது.
கல்லூரி அறங்காவலர் குழுவில் போதுமான எண்ணிக்கையில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் கலந்துகொண்டார் ஜாக்சன். மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டாலும், ஜாக்சன் உள்ளிட்ட சில மாணவர்கள்மீது கடுமை காட்டியது கல்லூரி நிர்வாகம். ஜாக்சன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தக் காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் சமூக சேவகராகப் பணியாற்றினார். பிறகு, உள்ளூரில் இருந்த ஒரு நாடக்குழுவில் சேர்ந்தார். நடிக்க ஆரம்பித்தார். `ஆஹா... நமக்கு நடிக்க வருதே... இதை விட்டுடக் கூடாது’ என முடிவெடுத்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து அதே கல்லூரியில் சேர்ந்து பி.ஏ ஆக்டிங் படிப்பில் தேர்ச்சி பெற்றார். இடையில் சில இயக்கங்களில் சேர்ந்தார். எஃப்.பி.ஐ வந்து அவரின் அம்மாவிடம் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமானது. பிரச்னைகள், கட்டுப்பாடுகள், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஏச்சு, பேச்சுகள்... எல்லாம் இருந்தாலும் நடிப்பை மட்டும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார் ஜாக்சன். அவர் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபோது ஒரு புதிய நாடக்குழு உருவானது. `ஜஸ்ட் அஸ் தியேட்டர்’ என்று அதற்குப் பெயர். அதை நிறுவியவர்களில் ஜாக்சனும் ஒருவர்.
`வாழ்நாள் முழுக்க நீங்கள் பார்த்த வேலையையும், அதற்காகச் செலுத்திய அர்ப்பணிப்பையும் எப்போது நீங்கள் மதிப்பிடுகிறீர்களோ அந்த நாள், ஓர் அழகான நாள்.’ - அமெரிக்க எழுத்தாளர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர் மேரி காத்தியர் (Mary Gauthier)
இசை, நடிப்பில் அவருக்கு அர்ப்பணிப்பும் ஆர்வமும் இருந்தாலும், குடும்பத்தில் நிலவிய வெறுப்பான சூழல் அவரை போதைப் பழக்கத்தில் தள்ளியது. மது, கோகெய்ன், ஹெராயின் என சதா விழுந்துகிடந்தார். போதை என்பது ஒரு மூடுபனி. நிரந்தரமல்ல. இது அவருக்கும் தெரிந்தே இருந்தது. ஆனாலும், அதிலிருந்து விலக முடியாமல் அல்லாடினார். உண்மையான வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போதைப் பழக்கம் முழுமையாக அவரை ஆக்கிரமித்திருந்தது. அவரது திறமைக்கு போதைப் பழக்கம் எந்தத் தொந்தரவும் தரவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
சாமுவேல் ஜாக்சன் நடித்தார்... தனக்குக் கிடைத்த சிறிய பாத்திரங்களைக்கூட கனகச்சிதமாகச் செய்தார். பாத்திரமாகவே மாறினார். முதலில் நாடகம், பிறகு சினிமாக்களில் சின்ன ரோல் என முன்னேறினார். தனக்கான வாய்ப்பு வந்ததும் அடித்து விளையாடினார். போதைப் பழக்கம் அவருடைய வெற்றிக்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது என்பதை ரொம்ப காலத்துக்கு அவர் உணரவேயில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த பிறகு, அவருக்குப் புகழ் தேடித்தந்த படம், `ட்ரூ ரொமான்ஸ்’ (True Romance). அந்தப் படத்துக்குக் கதை எழுதியவர், உலகமே உற்று கவனித்துக்கொண்டிருந்த இயக்குநர் குவான்டின் டொரன்டினோ (Quentin Tarantino). ஜாக்சன் அந்தப் படத்தையே தன் நடிப்பால் வேறு லெவலுக்குக் கொண்டுபோயிருந்தார். தொடர்ந்து வாய்ப்புகள்... ஆனாலும் போதைப் பழக்கமும் பின்னாலேயே வாலை ஆட்டிக்கொண்டு வரும் நாய்போல வந்துகொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் முடிவு என்று ஒன்று இருக்குமல்லவா... அந்தக் கேவலப்பட்ட பழக்கத்துக்கும் முடிவு வந்தது.
ஒருநாள், அவருடைய மனைவி அவருடைய தடுமாறிய நிலையைப் பார்த்துச் சொன்னார்... ``ஏங்க சொன்னா கேளுங்க... இதையெல்லாம் விட்டுடுங்க. முடியலையா... ஏதாவது போதை மறுவாழ்வு மையத்துலயாவது போய்ச் சேருங்க.’’
ஜாக்சன் காது கொடுத்துக்கூட அதைக் கேட்கவில்லை. ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார் ஜாக்சன்... ``என் மனைவி அந்த அளவுக்கெல்லாம் இறங்கிவரத் தேவையேயில்லை. சாதாரணமாக `வெளியே போ’ என்று சொல்லியிருக்கலாம். அதோடு என்னை இந்த உலகில் தனியாக விட்டுவிட்டு விலகிப்போயிருக்கலாம். `நீ என்ன வேணாலும் செஞ்சு செத்துத் தொலை’ என்று விட்டிருக்கலாம். அதை அவள் செய்யவில்லை.’’
ஜாக்சன் வாழ்க்கையில் திருப்பம் வந்த நாள் அது. நல்ல போதையில், தன் நினைவிழந்து கிச்சன் தரையில் அவர் விழுந்து கிடந்தார். மனைவியும் மகளும் வந்து பார்த்தார்கள். அவர்கள் மனது என்ன துடிதுடித்திருக்கும்... அதன் பிறகு மெல்ல அடங்கினார் ஜாக்சன். சில சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். தேறினார். படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். `ஸ்டார் வார்ஸ்’, `அவெஞ்சர்ஸ்’, `தி இன்கிரெடிபிள்ஸ்’... எனப் பல வெற்றிப் படங்களில் ஜொலிக்க ஆரம்பித்தார். இன்றைக்குப் பல பில்லியன் டாலர் சொத்துக்கு அவர் சொந்தக்காரர்.
மறுவாழ்வு மையத்துக்குப் போய் வந்த பிறகு சாமுவேல் ஜாக்சன் இப்படிக் குறிப்பிட்டார்... ``மறுவாழ்வு மூலம் கதாபாத்திரங்களை உருவாக்கும் விஷயங்களைக்கூட நான் புரிந்துகொண்டேன்.’’
நடிகர்களுக்குச் சம்பந்தமில்லாத, இயக்குநர்களின் வேலை அது. ஒழுக்கம் சிறந்த வாழ்க்கைக்கான கதவுகளைத் திறந்துவிடும் சாவி என்பதை ஜாக்சன் புரிந்துகொண்டார்... நாமும் புரிந்துகொள்வோம்!
இன்று பங்கு வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து 63,148-ஆக உள்ளது. நிஃப்டி 265 புள்ளிகள் சரிந்து 18,857-ஆக உள்ளது. நிஃப்டி 19,000-க்கு கீழே இறங்கிய பிறகும் தொடர்ந்து சரிந்து 18,838 வரை குறைந்தது.
கடந்த மூன்று நாள்களாக அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருமானம் குறைந்தபின் தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று அமெரிக்க பத்திரங்களின் வருமானம் 5 சதவிகிதத்தை நெருங்கி வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
இதுபோக இஸ்ரேல் போர் சூழலும் சந்தையை பாதித்துள்ளது. இன்றைய சந்தை சரிவில் மெட்டல் மற்றும் ரியல்டி பங்குகள் கடுமையாக இறங்கியுள்ளன.
பல மடங்கு லாபத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க்..
பஞ்சாப் நேஷனல் பேங்க் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் 327% உயர்ந்து 1,756 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் 411 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது லாபம் மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 20% உயர்ந்து, 9,923 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 1.47 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
வங்கியில் டெபாசிட்டுகள் 10% உயர்ந்து 13.09 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
டிவிடெண்ட் வழங்கும் ஏசியன் பெயின்ட்ஸ்...
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் டிவிடெண்டுக்கான அறிவிப்பும் வந்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 5.15 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்படும் என ஏசியன் பெயின்ட்ஸ் தெரிவித்துள்ளது.
டிவிடெண்ட் பெறுவதற்கான ரெக்கார்டு தேதி நவம்பர் 3. பங்குதாரர்களுக்கு நவம்பர் 13-ம் தேதி டிவிடெண்ட் செலுத்தப்படும்.
இந்த நிறுவனத்தின் காலாண்டு ரிசல்ட்டைப் பொறுத்தவரை, நிகர லாபம் 53% உயர்ந்து, 1,232.4 கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் 0.2% உயர்ந்து, 8,478.6 கோடி ரூபாயாக உள்ளது.
ஸொமேட்டோ பங்கு கடும் சரிவு...
இன்றைய வர்த்தகத்தில் ஸொமேட்டோ பங்கு விலை 6% மேல் சரிந்து 101.25 ரூபாய் வரை இறங்கியது.
பிளாக் டீல் வழியாக சுமார் 42.4 லட்சம் ஸொமேட்டோ பங்குகள் வர்த்தகமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த பிளாக் டீலில் பங்குகளை வாங்கியவர்கள், விற்றவர்கள் பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.
இதை அடுத்து ஸொமேட்டோ பங்கு விலை 6% மேல் சரிந்தது.
எனினும், வர்த்தகம் முடிவில் பங்கு விலை 1.7% சரிந்து, 106.45 ரூபாயாக உள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரை ஸொமேட்டோ பங்கு 70% மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போனஸ் வழங்கும் ஐ.டி நிறுவனம்...
சொனாட்டா சாஃப்ட்வேர் நிறுவனம் செப்டம்பர் காலாண்டு ரிசல்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் 10% உயர்ந்து, 124.17 கோடி ரூபாயாக உள்ளது. நிகர விற்பனை 28% உயர்ந்து 1,912.57 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும், பங்குதாரர்களுக்கு 7 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம்விட, பங்குதாரர்களுக்கு 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்கப்படும் என சொனாட்டா சாஃப்ட்வேர் தெரிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு சொனாட்டா சாஃப்ட்வேர் பங்குக்கும் ஒரு போனஸ் பங்கு கிடைக்கும்.
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சொனாட்டா சாஃப்ட்வேர் பங்கு விலை 8% மேல் உயர்ந்து 1135.25 ரூபாயாக உள்ளது.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://ift.tt/9awW6Bh. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://ift.tt/0InjqLN (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.
Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் ரயில்வே அதிகாரி பிஸ்வஜித் சாஹு கூறுகையில், "இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மீட்புப் பணிகள் தற்போது முடிந்துவிட்டன. சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 22 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.” என்றார்.
கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் `சாம்றா இண்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன்’ சென்டரில் யாக்கோபா சாட்சிகள் சபைகளின் மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. அந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்த சமயத்தில் காலை சுமார் 9.40 மணியளவில் அடுத்தடுத்து மூன்று பகுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. வெடித்த பகுதியில் தீ பற்றி எரிந்தது. அதில் பெரும்பாவூரைச் சேர்ந்த லெயோனா பவுலேஸ்(60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் சிகிச்சையில் இருந்த தொடுபுழாவைச் சேர்ந்த குமாரி புஷ்பன்(53), மலையாற்றூரைச் சேர்ந்த லிபினா(12) ஆகியோர் உயிரந்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயம் அடைந்த 36 பேர், வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில், `குண்டு வெடிப்பில் ஈடுபட்டது நான் தான்’ எனக்கூறிக்கொண்டு திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் மார்ட்டின் என்பவர் சர்ணடைந்துள்ளார். தன்னை கொச்சியைச் சேர்ந்தவன் என அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் சரணடைந்துள்ளார். அவர் சரணடையும் முன்பு ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், "எனது பெயர் மார்ட்டின். இப்போது நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யெகோவா சாட்சிகள் நடத்திய கன்வென்ஷனில் வெடிகுண்டு வெடித்ததையும் அதைத்தொடர்ந்து மோசமான சில சம்பவங்கள் நடந்தன. என்ன நடந்தது என எனக்கு முழுமையாக தெரியவில்லை. ஆனாலும் நடந்திருக்கும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் தான் அங்கு குண்டுவெடிப்பு நடத்தியது. எதற்காக நான் குண்டுவெடிப்பை செய்தேன் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகவும், எதற்காக அந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன் என்பதை விளக்குவதற்காகவே நான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். 16 ஆண்டுகளாக நானும் அந்த சபையில் உறுப்பினராக இருந்தேன். முதலில் நான் இதை சீரியசாக எடுக்காமல், நகைச்சுவையாக நினைத்தே இயங்கினேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இது மிக தவறான ஒரு நடவடிக்கை என உணர்ந்து கொண்டேன். அவர்கள் போதிப்பது மிகவும் தேச துரோக செயல் என உணர்ந்து கொண்டேன்.
இதை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் பலமுறை எடுத்து கூறினேன். ஆனால் அவர்கள் யாரும் அதை செய்ய தயாராக இல்லை. ஒரு நாட்டில் நாம் வாழ்கின்றோம். அந்த நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் மோசமாக 'வேசி சமூகம், நாசமாக போகும் சாதியினர், அவர்களுடன் சேரக்கூடாது, அவர்களுடன் உணவு உண்ணக்கூடாது' என்றும் சொன்னார்கள். இது தவறான பிரசாரம் என எனக்கு புரிந்தது. நான்கு வயது நர்சரி படிக்கும் குழந்தையிடம் உங்களுடன் படிக்கும் சக மாணவர்கள் தரும் மிட்டாயை வாங்கி சாப்பிடக்கூடாது என அவர்கள் சொல்லுகிறார்கள். 50 குழந்தைகள் உள்ள வகுப்பில் 49 குழந்தைகள் மிட்டாய் சாப்பிடும்போது, இந்த ஒரு குழந்தையின் நிலையை நினைத்துப்பாருங்கள். பெற்றோர் நான்கு வயது முதல் குழந்தையின் மூளையில் விஷத்தை ஊசியாக செலுத்துகிறார்கள்.
தேசிய கீதம் பாடக்கூடாது என குழந்தைகளிடம் போதிக்கிறார்கள். ஆசிரியர் ஆகுவதற்கு கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இதெல்லாம் அழிந்துபோகும் ஜனங்கள் செய்யும் செயல் எனக்கூறுகின்றனர். நமக்கு ஒரு நம்பிக்கை இருப்பதில் தவறு இல்லை. நாம் இந்த பூமியில் வாழுகிறோம், இறக்கிறோம். எல்லா மனிதர்களும் மரணித்துபோவார்கள் நாம் மட்டும் வாழ்ந்துகொண்டிருப்போம் என போதிக்கிறார்கள். 850 கோடி மக்கள் நாசமாக போகவேண்டும் என விரும்பும் அவர்களை நாம் என்னச் செய்வது. தவறான பிரசாரத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தே ஆகவேண்டும். எனக்கு ஆரம்பத்தில் இது புரியவில்லை. இது நாட்டுக்கு ஆபத்தானது என எனக்கு புரிந்ததால்தான் நான் இப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டியது வந்தது.
அரசியல் கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காது. மதம் என்றால் எல்லாருக்கும் பயம். நீங்கள் கண் திறக்க வேண்டும். இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்புபவர்களை நீங்கள் கட்டுப்படுத்தாமல் இருந்தால், என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் உயிரைக் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. அருகில் நிற்கும் உங்கள் சகோதரனையும், தாயையும், குழந்தையையும் வேசி சமூகம் என பட்டப்பெயர் சூட்டலாமா? ஒருவர்கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் கருத்துதான் சரி என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். யெகோவா சாட்சிகளே உங்கள் கருத்து தவறானது. மற்றவர்களுக்கு உதவி செய்யமாட்டார்கள், மரியாதை செலுத்தமாட்டார்கள்.
மிகவும் சிந்தித்துத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். தவறான அவர்களின் நடவடிக்கை நம் நாட்டில் முடிவை அடைந்தே தீரும். அவர்களின் கொள்கையை நான் எதிர்க்கிறேன். அவர்கள் இந்த நாட்டுக்கு தேவையில்லாதவர்கள் என நான் நினைக்கிறேன். நான் உடனே போலீஸில் சரணடையப்போகிறேன். எப்படி இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தேன் என்பதற்கான பார்முலாவை நீங்கள் ஒளிபரப்பு செய்யக்கூடாது. அது அது மிகவும் ஆபத்தானது. சாதரண மனிதர்களுக்கு அது தெரிந்தால் பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்கும். தயவுசெய்து மீடியாக்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ வெடிகுண்டு வெடிக்கச் செய்ததத்கான வழிமுறைகளை டெலிகாஸ் செய்யக்கூடாது" என அவர் வீடியோவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீஸ் மார்ட்டினின் முழு பெயர் டொமினிக் மார்ட்டின் எனவும், அவர் ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகமுதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி கனடா பிரஜைகளுக்கு விசா கொடுப்பதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் சுகா என்பவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில், இந்தியாவிற்கு பங்கு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியதால் இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கனடா தூதரகங்களில் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை உடனே நாட்டைவிட்டு வெளியேறும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனால் நாட்டில் டெல்லி தவிர்த்து இதர பகுதியில் உள்ள கனடா தூதரகங்கள் விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கின்றன.
இந்நிலையில் ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் கடியான் என்ற 19 வயதே நிரம்பிய மாஃபியா கும்பலைச் சேர்ந்தவன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இரண்டு ஆண்டுகளாக பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. தனது 17 வயதிலேயே கொலை, கொள்ளை மற்றும் ஆயுத கடத்தில் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய யோகேஷ், அமெரிக்காவில் உள்ள ஆயுத சப்ளையர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவன். அவன் தனது 17 வயதிலேயே போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவிற்கு சென்று அங்கு பதுங்கி இருக்கிறான் என்று தெரிய வந்துள்ளது. அகமதாபாத் சிறையில் இருக்கும் பஞ்சாப் பாடகர் கொலையில் முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயின் பரம எதிரியான பாம்பிஹா கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டு, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்திற்கு எதிராக யோகேஷ் செயல்பட்டு வருகிறான்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள யோகேஷ், ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை இந்தியாவிற்குள் கொண்டு வந்து லாரன்ஸ் கூட்டாளிகளை குறிபார்த்து அழிப்பதில் யோகேஷ் முன்னிலை வகித்து வருகிறான். பாம்பிஹாவின் நெருங்கிய கூட்டாளியான லக்கி பட்டியா, அர்ஜென்டினாவில் பதுங்கி இருக்கிறான். அவனும் யோகேஷும் இணைந்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியான கோல்டி பிரர் மற்றும் லாரன்ஸ் சகோதரர் அன்மோல் ஆகியோர் அமெரிக்காவில் பதுங்கி இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் கொலைசெய்ய யோகேஷும், லக்கி பட்டியாவும் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து யோகேஷை கைதுசெய்ய இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி ஹரியானாவில் உள்ள யோகேஷ் வீட்டில் ரெய்டு நடத்தியது. அதோடு அவனைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1.5 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், அவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கின்றனர். எனவே அவர்களை பிடிக்க மத்திய அரசு இன்டர்போல் உதவியை நாடி இருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர் கரன்வீர்சிங்கிற்கு எதிராக கடந்த மாதம் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. உள்ளூர் போலீஸார் மூலம் தேடப்படும் நபர்கள், எந்த நாடுகளில் தங்கி இருந்தாலும் அவர்களை கைதுசெய்து நாடு கடத்தும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க இன்டர்போலுக்கு அதிகாரம் இருக்கிறது.
ஏற்கெனவே அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் ஹிமன்சு மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. ஹிமன்சு மற்றும் யோகேஷ் ஆகியோரும் அமெரிக்காவில் இணைந்து செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - மதுரை சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் ஒன்று அவ்வழியாக வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. காரை நிறுத்துமாறு போலீஸார் சைகை காண்பித்தும், காரை நிறுத்தாமல் காவலரை இடித்து தள்ளிவிட்டு சோதனை சாவடியை கடந்து கார் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த காரை துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து, காருக்குள் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, காரில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முகம்மது அப்துல் சலீம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சைத்தன் சிங் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் என்பவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெற்றுக்கொண்டு சேலத்தில் இருந்து தென்காசி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திவந்தது தெரியவந்தது. மேலும், சோதனைச்சாவடி மற்றும் வாகனச் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக காரின் முன்பக்க கண்ணாடியில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் 'ஸ்டிக்கர்' ஒட்டி கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 60 மூட்டைகளில் இருந்த ரூ.12 லட்சம் சந்தை மதிப்புள்ள 610 கிலோ புகையிலைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, முகம்மது அப்துல் சலீம், சைத்தன் சிங் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வேலூர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து 'என்ன செய்தார் எம்.பி?' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க...
கதிர் ஆனந்தின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன... பதிந்து முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கிடையே அக்டோபர் 7-ம் தேதி துவங்கிய போர், தற்போது 21 நாள்களை எட்டியிருக்கிறது. இரு நாடுகளிலும் குண்டு மழை, துப்பாக்கிச்சூடு, தரைவழித் தாக்குதல், வான்வழித் தாக்குதல் எனப் பதற்றம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. மக்களின் கண்ணீர் அவலங்கள் கலைந்த பாடில்லை. போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலின் தாக்குதலில் 7,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பலியாகியிருக்கின்றனர். இதில் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இஸ்ரேல் தாக்குதலால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு உடல் சிதைந்தும், சிதறியும் உயிரிழந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் வருகைக்குப் பிறகும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியையே தழுவியிருக்கின்றன. போர் நிறுத்தத்துக்கான அறிகுறிகள் ஏதுமின்றி போர் தீவிரமடைந்து வருகிறது.
போரில் அடையாளம் தெரியாமல் உயிர் இழப்பதை விரும்பாத பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளின் கைகளிலும், உள்ளங்கால் பகுதிகளிலும் அவர்களது பெயர்களை எழுதி வருகின்றனர். இது இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டால், அவர்களை அடையாளம் காண உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.
தான் பெற்ற குழந்தை எப்போது வேண்டுமானாலும் உடல் சிதறி இறக்கலாம் எனத் தெரிந்து, அவர்களின் பெற்றோர் செய்யும் இது போன்ற காரியம் கேட்போர் நெஞ்சை உலுக்கிவருகிறது. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இந்தச் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வலைதளப் பக்கங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்திவருகின்றன.
``ஆளுநர் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது... கருணாநிதி பிறந்த தினத்தன்று 144 தடை உத்தரவைப் பிறப்பிக்குமா இந்த அரசு... மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை ஒரு சாதியத் தலைவர்களாகச் சுருக்கி, அவர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாட இங்கிருக்கும் அரசும், பல அரசியல் கட்சிகளும் முன்வருவதில்லை. இதை வெளிப்படையாக ஆளுநர் பேசியிருக்கிறார். மகாத்மா காந்தி தமிழகத்தில் பிறந்திருந்தால் இங்கு ஆளும் திராவிடக் கட்சிகள் அவருக்கும் சாதி, மதச் சாயம் பூசியிருக்குமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தொடர்ந்து மக்களை சாதி, மதரீதியாகப் பிளவுபடுத்தி, அதனால் ஆதாயம் தேடத் துடித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. மக்கள் நலன் குறித்து ஆளும் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. சட்டம்-ஒழுங்கு நாசமாகிக் கிடப்பதற்கு ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வெடித்த சம்பவமே ஆகச்சிறந்த சான்று.’’
``வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுகிறார் ஆர்.என்.ரவி. இன்றுவரை தமிழகத்திலுள்ள எந்த அரசியல் கட்சித் தலைவராவது தாங்கள் சார்ந்த சாதிப் பெயர்களை அடைமொழியாக வைத்துக்கொண்டதுண்டா... அப்படி ஒரு புரட்சியை இங்கு ஏற்படுத்தியது தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரலாற்றை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மோடி, ஷா எல்லாம் சாதிய அடைமொழிகள்தானே... தமிழ்நாட்டில் சாதிய அடையாளங் களைவைத்து நிலவிய கொடுமைகளை அகற்றி, சாதிய விஷத்தைத் துடைத்தெறிந்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதை தடுப்பதாகச் சொல்கிறார்கள். சுதந்திர அணிவகுப்பில் மருது சகோதரர்களின் சிலைகளுடன் தயாரிக்கப்பட்ட அணிவகுப்பு வாகனத்துக்கு அனுமதி மறுத்தது இவர்களின் அரசுதானே... சாதியத் தளைகளிலிருந்து விடுபட்டு தனித்துவத்துடன் நிற்கிறது தமிழ்நாடு. இங்கு வந்து சாதி, மதச் சண்டையை மூட்டிவிட நினைக்கும் மூடர்கள் தோற்றுப்போவார்கள்.’’
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். சாத்தூரில், மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாமில் மனுசீராய்வு பணிகளை ஆய்வு செய்த அவர், விருதுநகரில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி, "விருதுநகர் மாவட்டம் எழுத்தாளர்கள், ஆட்சியாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் என வரலாற்று சிறப்பு மிக்கது. உழைப்பால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம் இளைஞரணியை உதாரணமாக கூறலாம். முதல்வர் ஸ்டாலின், 1967-ல் ஆரம்பித்து இன்று வரை பலத்தரப்பட்ட அரசியல் கள பணிகளை செய்துள்ளார்.
படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராக உள்ளார். இன்று இந்த கூட்டத்தில் 9 பேருக்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 658 பேரில் 452 பேருக்கு இளைஞரணியில் பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞரணி உறுப்பினர்களுக்கு 'நீட் விலக்கு, நம் இலக்கு' என்ற பிரசுரம் வழங்கப்பட்டு, அதில் இணைய 'லிங்க்' வழங்கப்பட்டுள்ளது. 50 நாளில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற வேண்டும். இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இது தனிப்பட்ட உதயநிதி பிரச்னை இல்லை, தி.மு.க., பிரச்னை இல்லை. இது தமிழகத்தின் பிரச்னை.
மதுரையில் ஒரு கட்சியின் மாநாடு நடந்தது. அந்த மாநாடு எதற்காக நடந்தது, அதில் அந்த இயக்கத்தின் வரலாறு, கொள்கை எதாவது பேசப்பட்டதா, இல்லை. ஆனால் தி.மு.க., இளைஞரணியின் சேலம் மாநாடு இந்தியாவே பேசும் வகையில் எடுத்துக்காட்டாக அமையும். நீட் தேர்வால் 6 ஆண்டுகளில் மட்டும் 22 குழந்தைகளை இழந்துள்ளோம். அரியலுார் அனிதாவில் தொடங்கி, சென்னை குரோம்பேட்டை ஜெகதீசன் வரை நீட் தேர்வில் தகுதி பெற முடியாததால் தற்கொலை செய்துள்ளனர். தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியையும் நீட் தேர்வு போராட்டத்திற்கு அழைத்தோம்.
நீட் தேர்வில் அரசியல் புகுத்த வேண்டாம், இது மக்கள், மாணவர்களுக்கான போராட்டம். நீட் தேர்வு ரத்தானால் மொத்த பலனையும் நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று அன்றைய உண்ணாவிரத கூட்டத்தில் கூறினேன். இன்றும் அதையேத்தான் கூறுகிறேன். நீட் தேர்வு ரத்துக்காக பெறப்பட்ட கையெழுத்துக்களை இளைஞரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைப்போம். தமிழக முதல்வர், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். பிரதமர் மோடி, எங்கு போனாலும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் என்னை பற்றி தான் பேசுகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் வளர்ந்த ஒரே குடும்பம் கருணாநிதியின் குடும்பம்தான் என்று மத்திய பிரதேசத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இந்த ஒட்டுமொத்த தமிழகமுமே கருணாநிதியின் குடும்பம் தான். பா.ஜ.க., ஆட்சிக்கு வந்து ஒன்பதரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்.
இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் ஒரு நாடகம், நான் கையெழுத்திட மாட்டேன் என்கிறார். யார் மிகப்பெரிய நாடக நடிகர் என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை கேட்டால் தெரியும். அவரது காலை பிடித்து முதல்வராகி, பின் அந்தம்மாவின் கால்களையே வாரிவிட்டவர் பழனிசாமி. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அடிமைகளை விரட்டியது போல் 2024-ம் ஆண்டு தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றார்.
இதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித்தேர்வு படிப்பகத்தை திறந்துவைத்ததுடன், அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்ட முடிவில், 'திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகள் தொடர்பாக முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக' அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அங்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக, சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உரிமை தொகைக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 88 ஆயிரம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு பணம் வரவு வைக்கப்படுகிறது. மாநில அளவில் 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன. ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் கள ஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்ட 7.71 லட்சம் மனுக்களின் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலுவை மனுக்கள் ஆய்வு செய்த பிறகு முதல்வரின் ஆலோசனை பெற்று புதிதாக விண்ணப்பிப்போரின் வசதி ஏற்படுத்தப்படும். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக காவல்துறை அறிக்கை கொடுத்துள்ளது. எந்தவகையான வன்முறையாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்" என கூறினார்.