Ad

திங்கள், 9 அக்டோபர், 2023

குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல்நிலையத்தில் உயிரிழப்பு - கோவை அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் – ரதி என்ற தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை ஹரீஷ், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் காணாமல்போனது. பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் முத்துராஜ் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

கடத்தப்பட்ட குழந்தை

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் அவர் மனைவி திலகவதி குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் அவர்களை தேடிவந்தனர். நேற்று அவர்கள் இருவரும் கோவை ஆலாந்துறை அருகே இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ்,  ஆலாந்துறை காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பாண்டியன் திலகவதி
திலகவதி

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் பாண்டியன், திலகவதியை கைது செய்து ஆலாந்துறை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். போலீஸ் விசாரணையில் குழந்தையை கடத்தியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் சேலத்தில் இருந்த குழந்தையை போலீஸ் மீட்டுள்ளனர்.

இதனிடையே காவல்நிலையத்தில் விசாரணையில் இருந்தபோது திலகவதி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு  அழைத்து சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து 176 (1) (A)  பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸ், திலகவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். போலீஸ் காவலில் உள்ள ஒருவர் மரணமடைந்தால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரணம்

பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் உடல்நலக்குறைவால் இறந்தாரா அல்லது காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்தாரா என்பது தெரியவரும். போலீஸ் காவலில் மரணம் என்பதால், பிரேத பரிசோதனையின்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியமாகும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/crime/woman-death-in-coimbatore-police-station

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக