சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சிறையிலிருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
`வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் நபர்களில் ஒருவர் கூட சாட்சியாக சேர்க்கப்படவில்லை. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பா.ஜ.க-வில் ஏன் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டிருப்பதாகவும்’ குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத்துறை, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டது.
இதற்கிடையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, "வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில், எப்படி சாட்சிகளை கலைக்க முடியும்" எனக் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதால், செல்வாக்கான அவர், சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டது.
அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டபோதே அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறைச்சாலையில் மீண்டும் உடல்நட குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தற்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/government-and-politics/politics/senthil-balaji-was-admitted-to-the-chennai-government-hospital-after-a-heart-attack
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக