Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

கொடி கம்பம்: "சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது... திமுக புரிந்துகொள்ள வேண்டும்" - அண்ணாமலை

சென்னை கானத்தூர் பகுதியில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இந்த வீட்டின் காம்பவுன்ட் சுவர் முன்பாக இரு தினங்களுக்கு முன்பாக இரவு 45 அடி உயரமுள்ள பா.ஜ.க கொடிக் கம்பம் வைக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சியில் அனுமதி பெறவில்லை. மேலும் அந்தக் கொடிக் கம்பம் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அந்தப் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பி இணைப்புக்கு அருகிலிருந்ததாலும், ஆபத்தை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தன. இதனால் அந்த கொடி கம்பத்தை நீக்க அதிகாரிகள் வந்தனர். அப்போது பா.ஜ.க-வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமர் பிரசாத் ரெட்டி

அவர்களிடம் காவல்துறையும் மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக கானத்தூர் காவல்துறை வழக்கு பதிவுசெய்து, பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் உள்ளிட்ட 5 பேரைக் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,"தமிழகத்தில் பாஜக கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்ததிருக்கிறோம். தமிழக பா.ஜ.க-வின் ஒரு கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 100 நாள்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க கொடிக் கம்பங்கள் நடப்படும். தமிழகத்தில் இன்றிலிருந்தே நிறைய இடங்களில் கொடிக் கம்பங்களை அமைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கொடிக்கம்பம் என்பது மக்களுக்கு இடையூறு இல்லாமல், மற்றக் கட்சிக் கொடிகள் இருக்கும் இடத்தில் நடப்படுகிறது. அதற்கு அனுமதி மறுப்பதேன். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது என்பதை தி.மு.க புரிந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரம் எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமும், உத்வேகமும் அளிக்கிறது. எனவே, தேர்தல் களத்தில் சந்திப்போம்.

அதுவரை சண்டை சச்சரவுகள் நடக்கத்தான் போகிறது. இது ஜனநாயக அரசியலில் தவிர்க்க முடியாதவை. பா.ஜ.க தொண்டர்கள் 6 பேர் இன்று கொடிக்கம்ப வழக்கில் சிறையில் உள்ளனர்.

நீட் ஒழிப்பின் ரகசியம் முட்டையா. அதைக் காண்பித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். நீட் தேர்வை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். தி.மு.க அதை வைத்து அரசியல் செய்கிறது. நீட்டை முன்வைத்துத் தேர்தலைச் சந்திக்கத் தயார்" எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-leader-slams-dmk-udhyanidhi-stalin-for-neet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக