பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே காஸா நிலத்துக்காக நடத்தப்படும் போரில் அப்பாவி குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். நேற்று முந்தினம் காலை முதல் பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் எதிர் தாக்குதலை நடத்திவருக்கிறது. இரு தரப்பிலும் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். இருதரப்பிலிருந்து பல்வேறு போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
(Warning: This video contains sensitive content)
ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலை சேர்ந்த ஒரு தம்பதியினரை பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேலைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹனன்யா நஃப்தாலி தனது x பக்கத்தில், "இஸ்ரேலுக்குள்ளேயே தங்கள் வீட்டைக் கைப்பற்றிய ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஒரு குடும்பம் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளது. இது மனித குலத்திற்கு எதிரான குற்றம். உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். " எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவை பதிவித்திருக்கிறார்.
அந்த வீடியோவில், சிறிய குழந்தைகள் அழுவதையும், பயமுறுத்தப்படுவதையும் காணமுடிகிறது. அருகில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கிறது. தூக்கிலிடப்பட்ட பெண் உயிருடன் இருக்க வேண்டும் என அவளின் அண்ணன் அழுதுகொண்டே சொல்வது கேட்கிறது. அதற்கு 'அவள் திரும்பி வர வாய்ப்பே இல்லை அவள் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டாள்" என்றாக் குரலும் கேட்கிறது. மேலும் துப்பாக்கிச் சத்தமும், அதற்கு குழந்தைகள் பதறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக போப் பிரான்சிஸ், "இஸ்ரேலில் நடைபெறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதை நான் அச்சத்துடனும் வேதனையுடனும் கவனிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/crime/israeli-family-is-held-hostage-by-hamas-who-took-control-of-their-house-inside-israel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக