Ad

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

'இது எங்கள் மக்களுக்கான வெற்றி!' - இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் பெருமிதம்!

டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது ஆஃப்கானிஸ்தான் அணி. இந்த உலகக்கோப்பையின் முதல் அப்செட் இது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து முழுமையாக ஆஃப்கானிஸ்தானிடம் சரணடைந்து வீழ்ந்திருக்கிறது.
Afghanistan

ஆஃப்கானிஸ்தான் சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ரன்களை அடித்திருந்தார். பௌலிங்கில் முஜீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுவிட்டு அவர் பேசியவை இங்கே...

Mujeeb

'இது ஒரு பெருமிதமான தருணம். இப்படியொரு நாளுக்காகத்தான் நாங்கள் இத்தனை நாட்களாக உழைத்தோம். நடப்பு சாம்பியனை வீழ்த்தியிருக்கிறோம். ஒரு தேசமாகவே நாங்கள் செய்திருக்கும் சாதனையாக நினைக்கிறேன்.

இந்த ஆட்டநாயகன் விருதை ஆப்கானிஸ்தானின் ஹெராத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த வெற்றியும் அவர்களுக்காத்தான்.' என உருக்கமாக பேசியிருந்தார்.
Afghanistan

அணியின் கேப்டனான ஷாகிதி பேசுகையில், 'ஒட்டுமொத்த தேசமும் எங்களை நினைத்து பெருமைப்படும். இந்த வெற்றி எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அணிக்கு தேவையான சமயத்தில் பேட்டிங் - பௌலிங் இரண்டிலுமேமுஜீப் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்து அசத்திவிட்டார்.எங்களிடம் திறமை இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. கடந்த போட்டிகளில் எங்களால் சில விஷயங்களை சரியாக செய்ய முடியவில்லை.

அடுத்தடுத்தப் போட்டிகளுக்காகவும் காத்திருக்கிறோம். இது எங்களின் முதல் வெற்றி. கண்டிப்பாக இது கடைசியாக இருக்காது. இன்னும் வெல்வோம்.' என்றார்.
Rashid Khan

அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் பேசுகைய் 2016 டி20 உலகக்கோப்பையில் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணியை 142 ரன்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தோம். பேட்டிங்கில் சொதப்பியதால் அந்த போட்டியை நாங்கள் இழந்தோம். அதனை இன்றைய போட்டிக்கு முன்னர் நாங்கள் அதனை நாங்கள் நினைவுப்படுத்திக்கொண்டோம்.

ஆப்கன் மக்கள் மகிழ்ச்சி கொள்ள கிரிக்கெட் மட்டுமே ஒரே காரணமாக இருக்கிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் நிறைய மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். இந்த வெற்றி அவர்களுக்கானது தான்!' என ரஷீத் கானும் நெகிழ்ந்தார்.
Afghanistan

ஆஃப்கானிஸ்தான் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி புல்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு சென்றிருக்கிறது. ஆஃப்கனின் இந்த வெற்றியைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.



source https://sports.vikatan.com/cricket/worldcup-afghanistan-defeated-england-by-69-runs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக