Ad

சனி, 29 ஏப்ரல், 2023

``ஏதாவது செய்யுங்க'' - மனைவி வற்புறுத்தியதால் வந்த TATA கார்! அனுபவம் பகிர்ந்த TATA சந்திரசேகரன்!

டாடா சன்ஸ் (Tata Sons) தலைவரும், இந்திய தொழிலதிபருமான நடராஜன் சந்திரசேகரன் சமீபத்தில் BT Mindrush 2023 கருத்தரங்கில் `Reinventing Tata’ என்கிற தலைப்பில் பேசியிருந்தார். அதில் இந்த நிறுவனத்தின் வெற்றி, தோல்வி மற்றும் வாடிக்கையாளர்களோடு தங்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விளக்கமாக உரையாடினார்.

டாடா கார்

அந்த சமயத்தில், சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வாழ்வில் நடந்த பர்சனல் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ``நான் லோனாவாலாவிற்கு (Lonavala) வண்டியை ஒட்டிச் செல்வேன். என்னுடைய மனைவி எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் சாலையில் உள்ள கார்களை எண்ணிக்கொண்டே வந்தார். ''சாலையில் எந்த டாடா காரும் இல்லை. ஏதாவது செய்யுங்க!... என்னால எந்த டாடா காரையும் பார்க்க முடியவில்லை’’ எனக் கூறினார். 

அவர் வற்புறுத்தியதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தோம். இப்போது நீங்கள் சாலையில் டாடா கார்களைப் பார்க்க முடியும்.

டாடா மோட்டார்ஸின் மாற்றத்தில், எங்கள் குழுக்கள் கடினமாக உழைக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களைக் குறிவைத்து டாடா மோட்டார்ஸில் 10  மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யத்  திட்டமிடப்பட்டுள்ளன. லான்ச் செய்வதில் இருந்து நாங்கள் பின்வாங்க முடியாது. எல்லா தயாரிப்புகளும் நன்றாக, தரமானதாக இருக்க வேண்டும். 

எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தில் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். ஆனால் 2025-ல் வரவிருக்கும் கார்கள், முழுவதும் புதுமையான தொழில்நுட்பத்துடன் இருக்கும். புதுமையான வாகனங்களுக்காக நாங்கள் பல்வேறு ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.   

நடராஜன் சந்திரசேகரன்

நாங்கள் நம்பமுடியாத அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளோம். மிகக் குறுகிய காலத்தில் 80% சந்தையை நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம்.

நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்க வேண்டும் என்றாலும், அவற்றின் தழுவல் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவை வேகமாக இருக்க வேண்டும். இதற்காக நாங்கள் 4 ஆண்டுகள், 3 ஆண்டுகளில் செய்வோம் என்று சொல்ல முடியாது, அது வேலை செய்யாது" என்று கூறினார்.



source https://www.vikatan.com/business/companies/the-tata-car-that-came-because-of-wifes-insistence-tata-chandrasekaran-shared-his-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக