தினசரி ரூ.100 வீதம் 30 ஆண்டுகளுக்கு ஒருவர் முதலீடு செய்து வரும்பட்சத்தில் அவரால் சுலபமாக ரூ.1 கோடி சேர்க்க முடியும்.
தினசரி ரூ.100 என்கிறபோது மாதம்தோறும் அவர் முதலீடு செய்யும் தொகை ரூ.3,000 எனில், ஒருவர் 30 ஆண்டுகளில் அதாவது, 360 மாதங்கள் *3,000 = ரூ.10.80 லட்சம் ) முதலீடு செய்து வர வேண்டும். அதன் மூலம் எவ்வாறு ரூ.1 கோடி சேர்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.
டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
இந்தப் பணத்தை சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மூலம் ரூ.1 கோடியை சேர்க்க முடியும். டைவர்சிஃபைட் என்கிற போது லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட், ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.
லார்ஜ் கேப் என்பது இந்தியாவின் மிகப் பெரிய 100 நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யும் ஃபண்ட் திட்டமாகும்.
மல்டி கேப் என்பது லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் தலா 25 சதவிகித பணத்தைப் பிரித்து போடுவதாகும்.
ஃபிளெக்ஸி ஃபண்ட் என்பது எந்த வரையும் இல்லாமல் அனைத்து நிறுவனப் பங்குகளிலும் பணத்தை முதலீடு செய்யும் திட்டமாகும்.
பிரித்து முதலீடு..!
நாம் மேலே குறிப்பிட்ட லார்ஜ் கேப், மல்டி கேப், ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் முதலீடு பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 30 முதல் 50 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க் நீண்ட காலத்தில் மிகவும் பரவலாக்கப்பட்டு, ரிஸ்கே இல்லாத நிலை உருவாகிறது.
மேலும், ரிஸ்க்கை குறைக்க நாம் தலா மாதம் ரூ.1,000 வீதம் லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட், ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் பணம் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது.
ரூ.1 கோடி
மாதம் ரூ.3,000 வீதம் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு ஒருவர் முதலீடு செய்து வரும்பட்சத்தில் மொத்தம் செய்திருக்கும் முதலீடு ரூ.10.80 லட்சமாக இருக்கும். இந்த டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதம் வருமானம் கிடைக்கும்பட்சத்தில் லாபம் மட்டும் ரூ. 95.09 லட்சம் கிடைத்திருக்கும். ஆக மொத்தம் ரூ.1.05 கோடி கிடைத்திருக்கும்.
இதுவே டைவர்சிஃபைட் ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 14 சதவிகிதம் வருமானம் கிடைத்திருந்தால் பணம் ரூ.1.66 கோடியாகப் பெருகி இருக்கும். இந்தப் பணத்தை ரிஸ்க் குறைவான ஹைபிரீட் ஃபண்டுகளில் முதலீடு செய்து, ஆண்டுக்கு சராசரியாக 10 சதவிகிதம் வருமானம் கிடைத்திருந்தால் இந்தத் தொகை ரூ.68.37 லட்சமாகப் பெருகி இருக்கும்.
இந்தப் பணம் ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகிதம் வருமானம் கிடைக்கும் ரிஸ்க் இல்லாத வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் ரூ. 30.28 லட்சமாகத்தான் பணம் பெருகி இருக்கும்.
- ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://ift.tt/ZBRjyvO
source https://www.vikatan.com/personal-finance/money/rs100-per-day-rs3000-investment-per-monthcrore-rupees-in-30-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக