பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைப்பவர்களின் முதல் சேமிப்புத் திட்டம் `ஃபிக்ஸட் டெபாசிட்டாக' (Fixed Deposit) தான் இருக்கும். ஆண்டின் புதிய தொடக்கத்தில் சிறிய நிதி வங்கிகள் வைப்புத் தொகைக்கு எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகிறது எனத் தெரிந்து கொள்வோம்.
சிறு வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு அவை வழங்கும் வட்டி விகிதங்களும்…
*சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.51 சதவிகிதமும், யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.50 சதவிகித உயர் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
* 800 நாள்கள் மற்றும் 3 வருட கால ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.30 சதவிகிதம் வரை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் விகிதத்தை வழங்குகிறது.
* பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகப்படியாக ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.25 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது.
60 வயது மற்றும் அதற்கு மேலுள்ள மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 0.25% - 0.5% வட்டி கூடுதலாக வழங்கப்படுகிறது.
வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்வதற்கு முன்பு, வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தையும் தெரிந்துகொள்வது நல்லது.
source https://www.vikatan.com/government-and-politics/banking/small-banks-and-interest-rates-offered-on-fixed-deposits
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக