தமிழ்நாடு அரசு மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா, காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் மைதானத்தில், ஜனவரி 27 (வெள்ளிக்கிழமை) முதல், ஃபிப்ரவரி 5 வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 126 புத்தக விற்பனை அரங்குகள், மற்றும் 24 அரசுத்துறை சார்ந்த அரங்குகள் இடம் பெற்றுள்ளன. நாள்தோறும் காலை 11 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்கி, இரவு 9.30 மணி வரை நிறைவுபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசமாக அளிக்கப்படுவதுடன், புத்தகத்துக்கு 10% சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
விகடன் பிரசுரம், சாகித்ய அகாதெமி, என்சிபிஹெச், காலச்சுவடு, கிழக்குப் பதிப்பகம், கௌரா, பாரதி, விஜயபாரதம், விஜயா, தமிழினி, உயிர்மை, பெரியார் சுயமரியாதை, அறிவியல் பலகை, ஆரோக்யா புக்ஸ் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் அறிவியல், வரலாறு, அரசியல், பண்பாடு, கதை, கவிதை, நாவல், குழந்தை இலக்கியம், சுயமுன்னேற்றம், பொருளாதாரம், மனநல உளவியல், ஆன்மிகம் உள்பட பல்வேறு பிரிவுகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
10 நாள்களும் காலை மற்றும் மாலையில் பல்வேறு தலைப்புகளில் இலக்கியவாதிகள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர். வேலன் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிசாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/news/literature/tiruppur-book-fair-open-with-150-books-stalls
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக