தொழில் புரட்சி 4.0 பற்றி அனைவரும் பேசும் காலம் இது. இது பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டும்தான். சிறு தொழில் நிறுவனங்களுக்கு அல்ல என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல; தொழில் புரட்சி 4.0 -க்கு சிறு தொழில் நிறுவனங்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்க ஒரு கருத்தரங்கம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி கிண்டி சிட்கோ கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில் துறையை சேர்ந்த பல நிபுணர்கள் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில் ஒரு தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கூறினார்கள்.
எம்.எஸ்.எம்.இ -களுக்கான தொழிற்புரட்சி 4.0 என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஃபேம் தமிழ்நாடு (தமிழ்நாட்டில் எம்.எஸ்.எம்.இ -களுக்கு வசதியளித்தல்) மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்தோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ஐ.ஏ.சி.சி) இணைந்து நடத்தியது.
இந்தக் கருத்தரங்கம், ஐ.ஓ.டி அமைப்பு போன்று தொழிற்புரட்சி 4.0-க்கு ஏற்ற வகையில் எம்.எஸ்.எம்.இ -க்களை உருவாக்கவும், ஒ,இ.எம்-ன் (OEM) தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஃபேம் தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதி ஆகும்.
தமிழ்நாடு தொழில் வர்த்தகத் துறை மேலாண்மை இயக்குநர் சிகி தாமஸ் வைத்தியன், தமிழ்நாடு தொழில் வணிகத் துறை இயக்குநர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா, தமிழ்நாடு தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையர், டிட்கோ திட்ட இயக்குநருமான பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
ஐ.ஓ.எஃப்.எஸ் திட்ட இயக்குநரும், டாம்கோ, டான்சம், மற்றும் டான்காமின் நிர்வாக இயக்குனருமான பி.கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கில் பேசுகையில், “மாநிலத்தின் உற்பத்தித் துறையை நான்காவது தொழில் புரட்சியாக மாற்றுவதற்காக டான்காம், டான்சம், டான்கோ ஆகிய மூன்றும் நிறுவப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.இ -க்களை பார்வையிடவும், கிடைக்கக்கூடிய பல்வேறு வசதிகளைப் பயன்படுத்த அனைவரும் ஒன்று சேர வேண்டும்’’ என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு தொழில் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வணிக இயக்குநர் சிகி தாமஸ் வைத்தியன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, தொழில்களின் சமீபத்திய போக்குகளுக்கு ஏற்ப புதிய முயற்சிகளைக் கொண்டுவருவதாகவும் மேலும் தமிழ்நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இத்தகைய தளங்களைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், வெளித்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தரமான பொருள்களை தமிழ்நாட்டிலிருந்து வழங்க வேண்டும்’’ என்றும் கூறினார்.
ஐ.ஓ.எஃப்.எஸ் மற்றும் டிட்கோ திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி, ‘‘உற்பத்தித்திறன் அதிகரிப்பு, வடிவமைப்பு முடுக்கம், டிஜிட்டல்மயமாக்கல், குறைந்த கார்பன் தடம், தொழிலாளர் செலவு குறைப்பு, செயல்திறன் அதிகரிப்பு போன்ற தொழிற்புரட்சி 4.0 -இன் நன்மைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ -களில் தொழிற்புரட்சி 4.0 -க்கு விரைவாக தொழில்முனைவோர்கள் மாற வேண்டும்’’ என்றும் கூறினார்.
ஐ.ஏ.சி.சி. இந்தோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவரும், ப்ரிசிஷன் எக்யூப்மெண்ட் (சென்னை) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான பிரபு பாலா, தொழிற்புரட்சியின் பல்வேறு நிலையையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் தொழிற்புரட்சி 4.0 -வை உடனடியாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்புரட்சி 4.0 -வை செயல்படுத்த சலுகை விகிதங்களுடன் தற்போதுள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் வசதிகள் குறித்தும் மேலும் டிஜிட்டல் மயமாதலின் நன்மைகள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை டிஜிட்டலின் வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.
மேலும், இந்தக் கருத்தரங்கில் பேசிய லிங்கன் எலக்ட்ரிக் கம்பெனி (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் தெற்காசியா எம்.டி. எஸ்.சுந்தரம் தொழிற்புரட்சி மற்றும் தொழிலில் டிஜிட்டல் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
எமர்ஜன் ஆட்டோமேஷன் சொல்யூஷன்ஸின் இயக்குநர் விஜய் ஜாவடே, டிஜிட்டல் தொழில்நுட்ப ஆலோசகர் சுனில் டேவிட், தொழில்துறை தகவல் தொழில்நுட்பத் தலைவர் ராமநாத வரதராஜன், மெல் சிஸ்டம்ஸ் & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கோகுல் பி தேஷ்பாண்டே ஆகியோர் ஒரு தொழில் தொடங்குவதற்கான மூலதனம், பணியாளர்கள் நியமனம், அனுபவம், தொழிலில் வரும் சிக்கல்கள், வரி குறித்த தீர்மானங்கள், தொழில் பட்டறைகள், கருவிகள் ஆகியவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது அவற்றை எவ்வாறு பராமரிப்பது ஆகியவை குறித்தும் சமூகத்தில் ஒரு தொழில் தொடங்கி அதில் வெற்றி பெறுவது குறித்தும் பேசினார்கள்.
சிறு தொழில்முனைவோர்களைப் புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பதாக இருந்தது இந்தக் கருத்தரங்கம்!
source https://www.vikatan.com/business/finance/industry-revolution-40-how-small-businesses-prepare
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக