நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கனரா பேங்க் காலனியில் வசித்து வருபவர், பன்னீர்செல்வம். அவரின் மனைவி தேவி, தஞ்சாவூரில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அதனால் இருவரும் தஞ்சாவூரில் குடியிருந்து வந்துள்ளனர். இதனிடையே பெண் அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் பணியாற்றிய போதிலும் குடும்பத்துடன் அடிக்கடி சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். கடைசியாக டிசம்பர் மாதம் இருவரும் பாளையங்கோட்டை வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் இருவரும் இன்று சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது வீட்டில் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 100 சவரன் நகை மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால் பன்னீர்செல்வமும் அவரின் மனைவி தேவியும் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/100-sovereign-gold-stolen-by-unknown-persons-in-an-engineers-house-in-nellai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக