Ad

செவ்வாய், 4 அக்டோபர், 2022

மனதின் வயதை இப்படியும் அறியலாம்... வைரல் ஆகும் ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடிக்கடி சுவாரஸ்யமான பதிவுகளை இடுவது வழக்கம்..

ஆனந்த் மஹிந்த்ரா

அவரது மனதைக் கவர்ந்த அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மனதார பாராட்டுவார். அவரின் ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஊக்கமளிக்கும் தகவல்களை ட்விட்டரில் அவ்வப்போது பகிர்ந்து வருவதால் நெட்டிசன்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.

இந்த நிலையில், ஒருநபரின் மன வயதை மதிப்பிடுவதற்கான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சோதனையை, ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில், வணிக அதிபர் ஒருவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சோதனையைக் கொண்ட ஓர் இடுகையைப் பகிர்ந்துள்ளார். ஒரு நபரின் மன வயதை மதிப்பிடுவதற்கு ஒரு சோதனை பயன்படுத்தப்படுகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மனநலப் பள்ளியால் இந்தச் சோதனை உருவாக்கப்பட்டது. 50 வயதுக்கு மேல் உள்ள ஒருவரால் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்று பல்கலைக்கழகம் கூறுகிறது. மேலும், தேர்வில் 12 வெவ்வேறு வாசகங்களை தவறு செய்யாமல் உரக்கப் படிக்க வேண்டும். இந்தச் சோதனை ஆனந்த் மஹிந்திராவை மிகவும் கவர்ந்தது.

அந்தச் சோதனையை ட்விட்டரில் பகிர்ந்து``இது ஓர் அற்புதமான துல்லியமான சோதனை என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்'' என்றார்.

தான் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகவும், நீங்களும் சோதித்துப் பாருங்கள் என்றும் அவர் பகிர்ந்திருந்தார். அவரது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பகிர்ந்திருந்ததில் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ஆங்கில வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன. அதனை வாசிப்பவர்கள் நிச்சயம் குழம்பிவிடுவார்கள். மொத்தம் 12 வாக்கியங்கள் இருக்கின்றன.

அந்த வாக்கியங்களை ஒன்றன்பின் ஒன்றாக படித்துவிட்டு கடைசியில் ஒவ்வொரு வாக்கியத்தில் இருக்கும் மூன்றாவது வார்த்தையைப் படித்தால், அது ஒரு வாக்கியமாக மாறும்.

அந்த வாக்கியத்தின் அர்த்தம் ``இப்படித்தான் வயதானவர்களை நாற்பது விநாடிகளுக்கு பிசியாக வைத்துக் கொள்ளவேண்டும்" என்ற பொருள் வரும். இதுதான் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.

ஆனந்த் மஹிந்திராவின் பதிவைப் பின்பற்றி,  ஆர்வத்துடன் பலர் சோதனையை முயன்று மகிழ்ச்சியடைந்தனர். பலர் இடுகையை மறுபகிர்வு செய்து, சோதனையைப் பற்றி அவர்கள் உணர்ந்ததை மற்ற பயனர்களுக்குத் தெரிவித்தனர். ``இது ஒரு புத்திசாலித்தனமான சோதனை. மிகவும் அற்புதமானது. 56-ல் தேர்ச்சி பெற்றேன்" என்றார் ஒருவர்.

anand mahindra

"இது ஆச்சர்யமாக இருக்கிறது. நான் முயல வேண்டும்."

"நான் இதை முழுமையாகப் பற்றிக்கொண்டேன்."

"ஏன் வயதானவர் மட்டும்? எல்லோரையும் 40 விநாடிகள் பிசியாக வைத்திருங்கள், மேலும் 20 விநாடிகள் அதைக் கடந்து செல்லுங்கள்."

"எனக்கு அதிகாரபூர்வமாக வயதாகிவிட்டது"... இப்படி பலரும் சோதனை செய்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பலர் சோதனையைத் தீர்க்க முடிந்ததாகவும், அதை புத்திசாலித்தனம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். சிலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தங்களுக்கு வயதாகி விட்டது என்பதை நிரூபித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!



source https://www.vikatan.com/oddities/miscellaneous/anand-mahindra-shares-mental-age-test-by-harvard-university

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக