பெங்களூருவில் ஆகஸ்ட் 2016-ல் 70 வயது மூதாட்டியை கொலை செய்து வீட்டில புதைத்த மகளையும், பேரனையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக வெளியான செய்தியில், கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரு கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசிக்கும் 27 வயதான சஞ்சய் வாசுதேவ் ராவ், தனது பாட்டி சாந்த குமாரியிடம் கோபி மஞ்சூரியன் உணவு தொடர்பாக வாய் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சண்டையில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது பாட்டியைக் அடித்துக் கொன்றுவிட்டார். இந்த தகவலை தன் தாயார் சசிகலாவிடமும் தெரிவித்திருக்கிறார். இறந்த உடலை என்ன செய்வது எனத் தெரியாததால் சஞ்சய் தனது நண்பரான நந்தீஷிடம் உடலை அடக்கம் செய்ய உதவி கோரினார். மூவரும் சேர்ந்து மூதாட்டியின் உடலை கரி மற்றும் சிமெண்டால் மூடி வீட்டில் உள்ள ஒரு அலமாரியில் புதைத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சஞ்சய், அவரின் தாயார் சசிகலா ஆகியோர் பிப்ரவரி 2017 -ல் வீட்டை காலி செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் மே 2017-ல் வீட்டைப் புதுப்பிக்கும் போது, வீட்டின் அலமாரியில் அழுகிய சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே இந்தத் தகவலை காவல்துறைக்கும் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் அதிகாரிகள் உடலை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நடைப்பெற்ற விசாரணையில், நந்தீஷை கைது செய்தனர். குற்றச்சாட்டுகளை அழித்த குற்றச்சாட்டில் மூன்றாவது குற்றவாளியாகப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், தாய் மற்றும் மகன் இருவரும் மகாராஷ்டிராவின் கோலாபூருக்கு தப்பிச் சென்றனர். சஞ்சய் தனது ஏரோநாட்டிகல் பொறியியல் படிப்பை விட்டு வெளியேறி, ஒரு உணவகத்தில் பணியாளராக வேலைபார்த்து வந்தார். அவரின் தாயார் சசிகலா கோலாப்பூரில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். அவர்களை தீவிரமாக தேடிவந்த காவல் அதிகாரிகள், கோலாப்பூரில் வங்கிக் கணக்கு தொடங்க குற்றவாளிகள் அளித்த விவரங்கள் மூலம் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/india/bengaluru-man-arrested-for-killing-grandmother-over-gobi-manchurian-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக