Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆணுறுப்பில் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்வது ஆரோக்கியமானதா? அது எல்லாக் குழந்தைகளுக்கும் தேவைப்படுமா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி
ஆணுறுப்பின் முன்னுள்ள தோல் பகுதியை மருத்துவத்தில் `rudimentary organ' என்று சொல்வோம். அதாவது காலப்போக்கில் செயலிழந்தது என்று அர்த்தம் கொள்ளலாம். குடல்வால் என சொல்லப்படும் அப்பெண்டிக்ஸ்கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். இப்படிப்பட்ட உறுப்புகளால் நம் உடலில் எந்தச் செயலும் நடப்பதில்லை.
அப்படித்தான் ஆணுறுப்பின் முன்தோலும் அவசியமில்லாத ஒன்று. `பைமோசிஸ்' (phimosis) என்ற நிலை உள்ள ஆண் குழந்தைகளுக்கு அதை நீக்க வேண்டியிருக்கும். அதாவது அந்தத் தோல் பகுதியை, பின்னோக்கி இழுக்க முடியாத நிலை இது. அதாவது ஆண் குழந்தைகள் சிலருக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதியானது ஒட்டிக்கொண்டது போலிருக்கும்.
இப்படிப்பட்ட நிலையிலும் அந்தக் குழந்தைகளுக்கு முன்தோல் நீக்கம் செய்வது நல்லது. சர்க்கரைநோயாளிகளுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் உண்டு. முன்தோலை நீக்குவதன் (circumcision) மூலம் இந்தத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
பொதுவாகவே ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் நிறைய கிருமிகள் இருப்பது இயல்பானது. கிருமித் தொற்றின் காரணமாக சிறுநீர்த்தொற்றும் வரலாம். அப்பகுதியில் அப்படி பாக்டீரியாவோ, பூஞ்சையோ சேரவிடாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது. அதற்காக முன்தோலை நீக்குவது உண்டு.
எனவே முன்தோல் நீக்குவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. முன்தோல் இருப்பது ஆரோக்கியமற்றது என்பதிலும் முன்தோலை நீக்குவது ஆரோக்கியமானது என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-foreskin-removal-surgery-necessary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக