Ad

புதன், 7 செப்டம்பர், 2022

மோதிய டூவீலர்; பற்றியெரிந்த அரசு பஸ்... பிறந்தநாளில் தீயில் கருகிய மாணவன் - திண்டுக்கலில் சோகம்

​திண்டுக்கல் மாவட்டம்​ ​ஒட்டன்சத்திரம் அண்ணா நகர் செக் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பிரவீன், நாகனம்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ், நரிப்பட்டியைச் சேர்ந்த நரசிம்மன் ஆகி​யோர் நண்பர்கள். மூவரும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷே​​​​​​​​​கம் என்பதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால், மாணவர்கள் விடுமுறையில் இருந்தனர். இதில் பிரவீனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு ஒரு டூவிலரில்​ ​3 பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் சாலையில் சென்றுகொண்டிரு​ந்தனர்.

எரிந்த பஸ்

அப்​போது ​மதுரையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி 41 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின் மீது முன் பக்கமாக டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ​டூவிலரை ஓட்டிச் சென்ற பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

​இந்நிலையில் ​டூவிலர் பேருந்தின் ​முன்பகுதியில் மோதி பெட்ரோல் டேங்க்கில் தீ பற்றி ​பஸ் வேகமாக ​எரியத் தொடங்கியது . பின்னர் பேருந்து தீப்பற்றி முழுவதுமாக எறிய தொடங்கியது. ​இதனால் பதறிய பயணிகள் ​பேருந்தில் இருந்து வேகமாக கீழே இறங்கி​ ஓடினர்.

எரிந்த நிலையில் பஸ்

​தகவலறிந்து விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்தனர். மேலும் ​டூவிலரில் 2 மாணவர்கள் பலத்த காயங்களுடன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே காயம் அடைந்த இரண்டு மாணவர்க​ளும் ஆபத்தான நிலையில் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்​.

​இத​னையறிந்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ​நிகழ்விடத்துக்கு வந்து பார்வையிட்டார். மேலும் இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருகிய டூவிலர்

இ​துகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாரிடம் விசாரித்தோம். மாணவர்கள் 3 பேரும் அஜாக்கிரதையாக டூவிலரை ஓட்டிச்சென்றுள்ளனர். மேம்பாலத்தில் எதிரே வந்த அரசு பஸ்ஸில் மோதியதில், தீப்பற்றியுள்ளது. உடனடியாக கீழே இறங்கிவந்த டிரைவர் மற்றும் பயணிகள் சிலர் டூவிலரின் பின்னே அமர்ந்திருந்த மாணவர்களை மீட்டுள்ளனர். ஆனால் டூவிலரை ஓட்டிவந்த பிரவீன் பஸ் வேகமாக மோதியதில் முன்பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரை மீட்க முயன்றபோது தீ வேகமாக பற்றி எரிந்து அவர் முழுவதும் தீயில் கருகிவிட்டார். அரைமணி நேரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துமுடிந்ததால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் மாணவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது” என்றார்.



source https://www.vikatan.com/news/accident/government-bus-burnt-down-on-flyover-student-burnt-in-fire-on-birthday-in-dindigul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக