Ad

புதன், 7 செப்டம்பர், 2022

தங்கை திருமணத்தில் சோகம்; கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கறிஞர் - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திருவாரூர் மாவட்டம், நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரின் தங்கையான தையல்நாயகி என்பவருக்குத் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.

அரியலூர்

திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் மும்முரமாகச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு போன் வந்ததால் அருகிலுள்ள ஹோட்டலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

கொடூரமாக கொல்லப்பட்ட வக்கீல்

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சாமிநாதனைச் சரமாரியாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்தது. மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிவிட்டு டூவிலரில் தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கலைக்கதிரவன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலைக் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முன்விரோதத்தால் கொலை நடந்ததா இல்லை? வழக்கறிஞர் தொழிலில் ஏற்பட்ட பகையா என்பது குறித்து போலீஸாரின் விசாரணை நீள்கிறது. இது பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயில் காவல் நிலையம் அருகே பிரபல ரெளடி செல்வமணி என்பவரை வெட்டி கொலை செய்கிறது ஒரு கும்பல். அந்த கொலை வழக்கில் பின்னணியில் வழக்கறிஞர் சாமிநாதன் இருப்பதாகத் தகவல் வருகிறது... தற்போது தான் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறோம்” என்று முடித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/lawyer-brutally-murdered-by-a-gang-of-6-on-his-sisters-wedding

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக