Ad

புதன், 3 மார்ச், 2021

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் என்ன மாற்றம் நிகழும்? #VikatanPoll

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, பல்வேறு கூட்டணி பேச்சுவார்த்தைகளும், தொகுதிப் பங்கீடுகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதில் சிறைக்குச் சென்று திரும்பிய சசிகலா தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முனைப்புடன் செயல்படுவார், இதனால் அரசியல் மாற்றம் நிகழும் என்று பெரும்பாலானோர் நினைத்து வந்தனர். சசிகலாவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்த்துப் பேசிவந்தார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென்று, சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்." என்று தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த முடிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Also Read: `ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்; நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா

இது குறித்து உங்களின் கருத்து என்ன? சசிகலாவின் இந்த முடிவு தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை உருவாக்கும்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-sasikala-walking-away-from-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக